மத்திய பிரதேச மாநிலத்தில் பஞ்சாயத்து மற்றும் நகர்ப்புற அமைப்புகளுக்கான தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அனுப்பூர் பகுதியில் உள்ள மக்கள் விநோதமான போராட்டம் ஒன்றை கையிலெடுத்துள்ளது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.
அதன்படிம் அனுப்பூர் மற்றும் பிஜுரி மனேந்திரகர் பகுதியை இணைக்கும் சாலை முழுவதும் குண்டும் குழியுமாக உள்ளதை, வாக்கு கேட்டு வரும் அரசியல் கட்சியினருக்கு உணர்த்தும் வகையில் சாலையில் இறங்கி போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
சாலையில் போராடுவது வழக்கமானதுதான் என கேள்வி எழலாம். ஆனால், அண்மையில் பெய்த மழையால் குண்டும் குழியுமாக இருந்த பகுதிகளில் தண்ணீர் தேங்கி சாலைகள் அனைத்தும் குட்டைபோல் காட்சியளிக்கிறது.
இது அப்பகுதி மக்களுக்கு மேலும் சிரமத்தையே கொடுத்திருக்கிறது. இது தொடர்பாக பலமுறை புகாரளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருந்ததாகவும் அனுப்பூர் மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
#MadhyaPradesh में लीजिए sea beach का मज़ा https://t.co/sLmT6c5qC2 pic.twitter.com/FLPkc5Y5V7
— Ravish Pal Singh (@ReporterRavish) July 4, 2022
ஆகையால் இந்த அவல நிலையை வெளிக்கொணரும் வகையில் அனுப்பூர் பகுதியைச் சேர்ந்த மக்கள் சிலர், மழை நீர் தேங்கிய அந்த பள்ளத்தை கடற்கரை போன்று சித்தரித்து, அதில் சேர் டேபிள் போட்டு, அதனருகே சில செடிகளை நட்டு வைத்து, ஸ்நாக்ஸ் சாப்பிடுவது போன்று ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.
இது தொடர்பான வீடியோவை பகிர்ந்த இந்தியா டுடே செய்தி நிறுவனத்தை சேர்ந்த ரவிஷ் பால் சிங், மத்திய பிரதேசத்தின் கடற்கரையை கண்டு ரசிக்கிறேன் என கிண்டலாக பதிவிட்டிருக்கிறார். இந்த வீடியோ கிட்டத்தட்ட 6 லட்சம் வியூஸை பெற்றிருக்கிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM