லண்டனில் ஒரு கடையில் நடிகர் அஜித்குமார் பெண் ஒருவருக்கு வழிவிட்டு ஒதுங்கும் வீடியோ காட்சி சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்களை கொண்ட நம்பர் 1 நடிகராக இருப்பவர் அஜித்குமார். இவர் தற்போது லண்டனில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
அங்கு தன்னை சந்திக்கும் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்து கொள்கிறார்.
சமீபத்தில் கூட இலங்கை தமிழருக்கு லண்டனில் பிறந்தநாள் வாழ்த்து கூறி சர்ப்பரைஸ் தந்தார்.
இந்நிலையில் அஜித்குமார் லண்டனில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டுக்கு சென்றார்.
Ajith sir in London.
| Video: Yathees | @arianoarun | #Ak #Ajith #AjithKumar | #Ak61 | pic.twitter.com/qKGjtfa4Xy
— Ajith (@ajithFC) July 4, 2022
அங்கு கேஷியருக்கு கை குலுக்கிவிடுகிறார். பின்னர் ஒரு கார்டை கொடுத்து ஏதோ கேட்கிறார். பிறகு கடைக்கு உள்ளே சென்று எதையோ தேடுகிறார். அப்போது ஒரு பெண் வருவதை கவனிக்கிறார்.
உடனே அவருக்கு வழிவிட்டு ஒதுங்குகிறார். இதுதான் அஜித்தின் குணம், அவர் எப்போதும் ஒரு ஜென்டில்மேன் என அவரது ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.