சினிமா நடிகைகளை விட சீரியல் நடிகைகளுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருவது அவைரும் அறிந்த ஒன்று. இந்த வரவேற்பை பயன்படுத்திக்கொள்ளும் வகையில் சின்னத்திரை நடிகைள் பலரும் தங்களது சமூ வலைதளங்களில் ஆக்டீவாகஇருந்து வருகிறது.
இதில் அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வரும் அவர்கள், சில சமயங்களில் வித்தியாசமாக போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றனர். எதுவுமே வித்தியாசமாக இருந்தால் அனைவரையும் கவரும் என்று சொல்லாம்.
அந்த வகையில் பிரபல சீரியல் நடிகை காவியா அறிவுமணி வெளியிட்டுள்ள வித்தியாசமாக போட்டோஷூட் இணையத்தில் வைரலாகி வருகிறது. பொதுவாக அதிகமான நடிகைகள் மாடலிங் போட்டோஷூட் எடுப்பதற்காக மாடர்ன் உடைகளை அணிந்து புகைப்படம் எடுப்பார்கள்.
ஆனால் இதில் சற்று வித்தியாசமாக காவியா, கிராமத்து தாவணி பாவாடையில் போட்டோஷூட் நடத்தியுள்ளார். இந்த ட்ரஸ் மூலம் அச்சு அசலாக கிராமத்து பெண்ணாக மாறியுள்ள காவியா குடிசை வீடு, மண் அடுப்பு கட்டிட வேலை என்று கிராமத்து சூழலை தனது புகைப்படத்தில் கொண்டு வந்துள்ளார்.
இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் பலரும் சூப்பர் என்று கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“