கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே பெட்ரோல் நிரப்ப மதுபோதையில் வந்த மூன்று பேர், பங்க் ஊழியர் மீது தாக்குதல் நடத்தி விட்டு தப்பி ஓடினர்.
வர்க்கலா பகுதியில் செயல்படும் பெட்ரோல் பங்கிற்கு ஆட்டோவில் வந்த 3 பேர், 70 ரூபாய்க்கு பெட்ரோல் நிரப்ப கோரியுள்ளனர்.
அப்போது ஊழியருக்கும், மதுபோதையில் இருந்த நபர்களுக்கும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
CTஇதில், பங்க் ஊழியரை தலையில் அடித்து, நாற்காலியை கொண்டும் தாக்கிய மூன்று பேரும் ஆட்டோவில் தப்பிச்சென்றனர்.