சில வாரங்களுக்கு பசியால் அழுத ஆறு மாத குழந்தைக்கு உணவு கொடுக்க மறுத்த இண்டிகோ விமான நிறுவன ஊழியர்கள் குறித்து பெரும் சர்ச்சை எழுந்தது.
இது சமூக வலைதளங்களில் பரவி பெரும் சலசலப்பினை ஏற்படுத்தியது. இதற்கு பல தரப்பில் இருந்தும் கண்டனங்கள் எழுந்தன.
அந்த சம்பவமே மக்கள் மனதில் இருந்து மறையாத நிலையில், தற்போது மற்றோரு சர்ச்சை கிளம்பியுள்ளது.
பசியால் அழுத 6 மாத குழந்தைக்கு உணவு கொடுக்க மறுத்த இண்டிகோ: நெட்டிசன்கள் விளாசல்!
மாணவிக்கு உதவி
மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, ஜூலை 4 அன்று, இண்டிகோ விமானத்தில் ஒரு பயங்கரமான அனுபவத்தினை பெற்ற மாணவிக்கு ஒடோடி வந்து உதவியுள்ளார். தன்னுடைய லக்கேஜினை தொலைத்த மாணவிக்கு ஹாஸ்டல் வரையில் கொண்டு சேர்த்துள்ளார். இது பலரின் பாரட்டையும் பெற்றுள்ளது.
ஹாஸ்டல் வாசலில் டெலிவரி
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்திலும் மாணவியை டேக் செய்து, உங்களது லக்கேஜ் ஹாஸ்டல் வாசலில் டெலிவரி செய்யப்பட்டுள்ளது. டேக் கேர் என பதிவிட்டுள்ளார்.
உண்மையில் என்ன தான் நடந்தது? விமான போக்குவரத்து அமைச்சரே இப்படி பதிவிட்டுள்ளாரே என்ன காரணம்? வாருங்கள் பார்க்கலாம்.
இண்டிகோவில் ஏற்பட்ட பயங்கர அனுபவம்
கடந்த ஜூலை 1 அன்று அனுஷா மாணவி தனது ட்விட்டர் பக்கத்தில், இண்டிகோ விமானத்தில் பயணித்தபோது ஏற்பட்ட பயங்கரமான அனுபவத்தினை பகிர்ந்துள்ளார்.
அனுஷா தனது இலக்கினை அடைய 24 மணி நேரத்திற்குள் 4 வெவ்வேறு விமான நிலையங்களுக்கு செல்ல வேண்டியிருந்தது என்றும், இறுதியாக அவள் இலக்கினை அடைந்து சென்றபோது, அனுஷாவின் லக்கேஜ்கள் டெலிவரி செய்யப்படவில்லை என தெரிவித்துள்ளார்.
விமான நிலையத்தில் வந்து எடுத்துக்கோங்க
மேலும் விமான நிலைய அதிகாரிகள் விமான நிலையத்திற்கு வந்து, தனது லக்கேஜினை எடுத்து செல்லுமாறு கூறியதாகவும் தெரிவித்துள்ளார். அதனை தொடர்ந்து ட்விட்டரில் இண்டிகோவுடன் பயணம் செய்ததில் மிகவும் பயங்கரமான அனுபவம் ஏற்பட்டது. நான் 24 மணி நேரத்திற்கு 4 வெவ்வேறு விமான நிலையங்கள் செல்ல வேண்டியிருந்தது. இறுதியாக நான் சென்றடைந்தபோது எனது லக்கேஜ்கள் டெலிவரி செய்யப்படவில்லை.
இன்னும் என்னென்ன அனுபவிக்கனும்?
தற்போது அவர்கள் என்னிடம் நாளைக்குள் விமான நிலையத்தில் இருந்து லக்கேஜினை எடுத்து செல்ல வேண்டும் என கூறுகின்றனர். நான் இன்னும் எவ்வளவு மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் அனுபவிக்க வேண்டும்.
என்னை பலிக்கிடா ஆக்குகிறீர்களா?
எனது கல்லூரி புறநகர் பகுதியில் உள்ளது. விமான நிலையத்தினை அடைய சுமார் 700 – 800 பக்ஸ் (இன்றைய இந்திய மதிப்பில் சுமார் 63,000 ரூபாய்) ஆகும். உங்களது உயர்ந்த கட்டணத்தை செலுத்த வேண்டியிருக்கும். உங்கள் திறமையின்மைக்கு என்னை செலுத்த வைக்கிறீர்களா? என்றும் ட்விட்டரில் விளாசியுள்ளார்.
மாணவிக்கு உதவி
இந்த நிலையில் தான் மாணவியின் கதறலை கேட்டு மத்தியில், மத்திய அமைச்சர் சிந்தியா அனுஷாவுக்கு உதவியுள்ளார். அனுஷாவின் உடைமைகளை அவளது கல்லூரி வாசலிலேயே டெலிவரி செய்ய உதவியுள்ளார்.
சமிபத்தில் குழந்தைக்கு உணவு கொடுக்காமல் அலைகழித்த இண்டிகோ, சில தினங்களுக்கு முன்பு 900 விமானங்களை தாமதமாக இயக்கியதாகவும் சர்ச்சை எழுந்தது. தற்போது மாணவியின் லக்கேஜ் டெலிவரியிலும் சொதப்பியுள்ளது.
Indigo lost student’s luggage:Union minister helps student to retrieve lost luggage
Indigo lost student’s luggage:Union minister helps student to retrieve lost luggage/அன்று குழந்தைக்கு உணவு கொடுக்க மறுத்த இண்டிகோ.. இன்று மாணவியின் லக்கேஜ் டெலிவரியிலும் சொதப்பல்..!