இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்ட் நகரில், நாள் ஒன்றுக்கு நூற்றுக்கணக்கான மின்சார கார்களை சார்ஜ் செய்யக்கூடிய பிரமாண்ட சார்ஜிங் ஸ்டேஷன் திறக்கப்பட்டுள்ளது.
மக்களிடையே மின்சார வாகன பயன்பாட்டை மேலும் ஊக்குவிக்கும் விதமாக, ஒரே சமயத்தில் 42 கார்களை சார்ஜ் செய்யும் வகையில், 395 கோடி ரூபாய் மதிப்பில் Energy Superhub Oxford என்ற பிரமாண்ட சார்ஜிங் ஸ்டேஷன் திறக்கப்பட்டுள்ளது.
மேலும், மின்சாரத்தை சேமிப்பதற்காக லித்தியம் மற்றும் வனடியத்தால் உருவாக்கப்பட்ட 50-megawatt ஹைபிரிட் பேட்டரியும் இதில் நிறுவப்பட்டுள்ளது.