சாதாரண வீட்டு பெண்ணை மணந்த பெரும் கோடீஸ்வரர் முகேஷ் அம்பானி! ரோட்டு கடையில் காதல்


உலகமே பிரம்மித்து பார்க்கும் உச்சத்தில் இருப்பவர் தான் முகேஷ் அம்பானி! இந்தியாவின் மிகப்பெரிய கோடீஸ்வரர்களில் முதன்மை வரிசையில் இருப்பவர்.

இவருக்கு கடந்த 1985ஆம் ஆண்டு நீடா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது.

சாதாரண வீட்டில் பிறந்த நீடா மிகச்சிறந்த நாட்டியக் கலைஞர். மும்பையில் ஒரு நவராத்திரி விழாவின்போது நீடாவின் நடனத்தைக் கண்டு பிரமித்துப் போனார் முகேஷின் தந்தை திருபாய் அம்பானி.

தன் மூத்த மகனுக்குப் பொருத்தமாக இருப்பார் என்று நீடா குறித்து மனதுக்குள் எண்ணிக்கொண்டார். நீடாவை அழைத்த திருபாய், நாளை என்னை அலுவலகத்தில் வந்து சந்திக்க முடியுமா என்றார்.

எவ்வளவு பெரிய ஆள், நம்மை அலுவலகத்துக்குக் கூப்பிடுகிறாரே என்று பயந்து போனார் நீடா. எனினும், அடுத்த நாள் திருபாயை அலுவலகத்தில் சென்று சந்தித்தார்.

சாதாரண வீட்டு பெண்ணை மணந்த பெரும் கோடீஸ்வரர் முகேஷ் அம்பானி! ரோட்டு கடையில் காதல் | Neeta Mukesh Love Story Millionaire Man

முதலில், நீடாவின் பொழுதுபோக்கு, அவருக்குப் பிடித்த விஷயங்கள் குறித்து கேட்டறிந்து கொண்ட திருபாய் அம்பானி, நேரடியாக விஷயத்துக்கு வந்தார். ‘என் மூத்த மகன் குறித்து உங்களுடன் பேச வேண்டும். அவனை சந்திக்க உங்களுக்கு விருப்பமா என்று கேட்டார்.

நீடா பயமறியாத பெண். ‘அதிலென்ன இருக்கிறது!’ என்று முகேஷை அவரின் வீட்டில் போய் சந்தித்தார். தொடர்ந்து பலமுறை சந்திப்பு நடந்தது.

முகேஷ் அம்பானியின் சொகுசு வாழ்க்கையை சோதனைக்குட்படுத்தியுள்ளார் நீடா.

அதற்காக அவரை மும்பை நகரின் பல்வேறு பகுதிகளுக்கு பேருந்தில் அழைத்துச் சென்றிருக்கிறார். ரோட்டு கடைகளில் உணவருந்த வைத்திருக்கிறார்.

அங்கெல்லாம் தான் இருவருக்குமான பிணைப்பு அதிகரித்துள்ளது.

ஒருநாள் காரில் செல்லும்போது திருமணம் செய்து கொள்ளலாமா என முகேஷ் அம்பானி கேட்டார்.

நீடா எதுவும் சொல்லாமல் மௌனம் காக்கவே, பதில் சொன்னால் தான் வண்டியை எடுப்பேன் என்று கூறினார். பின்னர் நீடா ஒப்புக்கொள்ள, கடந்த 1985-ம் ஆண்டு நீடா இந்தியாவின் பணக்கார வீட்டுக்கு மருமகள் ஆனார்.  

சாதாரண வீட்டு பெண்ணை மணந்த பெரும் கோடீஸ்வரர் முகேஷ் அம்பானி! ரோட்டு கடையில் காதல் | Neeta Mukesh Love Story Millionaire Man



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.