பட்டுக்கோட்டை அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில், சக்கரத்தின் அடியில் சிக்கிய நபர் சில மீட்டர் தொலைவுக்கு இழுத்து செல்லப்பட்டு உயிரிழந்தார்.
பட்டுக்கோட்டை மகளிர் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர் சுதாவின் கணவர் முத்து கிருஷ்ணன், தனது உறவினருடன் இருசக்கரவாகனத்தில் சென்ற போது, கொண்டிகுளம் பகுதியில் பெட்ரோல் பங்கிற்கு செல்ல திரும்பும்போது எதிர்பாராதவிதமாக லாரி மோதியது.