ஈரோடு மாவட்டத்தில் இருசக்கர வாகனங்கள் மோதிய விபத்தில் வியாபாரி உயிரிழந்து உள்ளார்.
ஈரோடு மாவட்டம் பவானி வர்ணபுரம் பகுதியை சேர்ந்தவர் வியாபாரி வெங்கடேஷ்(42). இவர் இருசக்கர வாகனத்தில் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் சத்தியமங்கலம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
அப்பொழுது ஆப்பக்கூடல் அருகே, மற்றொரு இருசக்கரம் ஒன்று எதிர்பாராத விதமாக வெங்கடேசன் இருசக்கரத்தின் மீது மோதியது. இதில் வெங்கடேசன் மற்றும் அவரது மனைவி, குழந்தைகள் தடுமாறி கீழே விழுந்த நிலையில் படுகாயம் அடைந்துள்ளனர்.
இதையடுத்து அப்பகுதியில் இருந்தவர்கள் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி வெங்கடேஷ் பரிதாபமாக உயிரிழந்து உள்ளார்.
மேலும் இந்த விபத்து குறித்து ஆப்பக்கூடல் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.