Congress MP Vijay Vasanth Rs.1.50 lakh pen missing: தந்தை நினைவாக வைத்திருந்த பேனா காணாமல் போனதாக காங்கிரஸ் எம்.பி விஜய் வசந்த் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 1.50 மதிப்புள்ள பேனா காணாமல் போனது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் எதிர்க்கட்சிகளின் குடியரசு தலைவர் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹாவை வரவேற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், தி.மு.க கூட்டணி கட்சிகள் பங்கேற்றன.
இதையும் படியுங்கள்: தி.மு.க.,வில் இருந்து ஒரு ஷிண்டே புறப்படுவார் – அண்ணாமலை
இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் உறுப்பினர்களின் ஆதரவு கோரும் பொருட்டு காங்கிரஸ் எம்.பி. விஜய் வசந்த் கலந்துகொண்டார். அப்போது, விஜய் வசந்தின் ரூ.1.50 லட்சம் மதிப்பிலான பேனா மாயமாகியுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த விஜய் வசந்த் பேனாவை யாரேனும் திருடி இருக்கலாம் என்று சந்தேகித்து கிண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
காணாமல் போயிருக்கும் பேனா விஜய் வசந்தின் தந்தையும், கன்னியாகுமரியின் முன்னாள் எம்.பி.,யுமான மறைந்த வசந்தகுமார் பயன்படுத்திய பேனாவாகும். தந்தை இறந்த பிறகு அதே தொகுதியில் எம்.பியாக வெற்றி பெற்ற விஜய் வசந்த் தந்தையின் நினைவாக அந்த பேனாவை பயன்படுத்தியுள்ளார்.
இந்த நிலையில், ரூ.1.50 லட்சம் மதிப்பிலான அந்த பேனா காணாமல் போனது விஜய் வசந்திற்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.