பிரதமர் யார் நலனின் அக்கறை காட்டுகிறார்?.. ஜிஎஸ்டி வரி குறித்து ராகுல் காந்தி கண்டனம்..!

டெல்லி: நாடு முழுவதும் குறைவான அளவிலான ஒற்றை ஜிஎஸ்டியை கொண்டு வருவதன் மூலம் ஏழை, நடுத்தர மக்களுக்கு உதவ முடியும் என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். சரக்கு மற்றும் சேவை வரியான ‘ஜிஎஸ்டி’, கடந்த 2017ம் ஆண்டு ஜூலை 1ம் தேதி நாடு முழுதும் அமல்படுத்தப்பட்டது. கடந்த ஜூலை 1 ஆம் தேதியுடன் 5 ஆண்டுகளை ஜிஎஸ்டி நிறைவு செய்த நிலையில், மத்திய பாஜக அரசு அதனைக் கொண்டாடி வருகிறது. மத்தியில் பாஜக அரசு ஆட்சி அமைத்து 8 ஆண்டுகள் கடந்து விட்டதை தொடர்ந்து பணமதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை ஆகியவற்றை தொடர்ந்து எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ஜிஎஸ்டி குறித்து ஒன்றிய அரசை கடுமையாக விமரிசித்துள்ளார். இது தொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டர் பதிவில்; மருத்துவக் காப்பீடு மீதான ஜிஎஸ்டி: 18%மருத்துவமனை அறை மீதான ஜிஎஸ்டி: 5%வைரங்கள் மீதான ஜிஎஸ்டி: 1.5%இதன் மூலம் பிரதமர் யார் நலனின் அக்கறை காட்டுகிறார் என்பது தெரிய வருவதாகவும் ராகுல் குறிப்பிட்டுள்ளார். ஏழை, நடுத்தர மக்களுக்கு பாதகமாகவும், பணக்காரர்களுக்கு சாதகமாகவும், உள்ள தற்போதையை ஜிஎஸ்டி வரி முறையை கைவிட வேண்டும். குறைவான அளவில் ஒற்றை ஜிஎஸ்டி வரியை கொண்டு வருவதன் மூலமே ஏழை, நடுத்தர மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.