பொரளை டிக்கிள் வீதியில் எரிபொருள் கொள்வனவு செய்வதற்காக வரிசையில் காத்திருந்த 60 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்
உயிரிழந்தவர் IDH பகுதியில் வசிப்பவர் என தெரியவந்துள்ளதுடன், நாட்டின் பல பகுதிகளில் எரிபொருள் வரிசைகள் தொடர்பான சுமார் 11 இறப்புகள் தற்போது பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.