வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
பர்மிங்காம்: ஐந்தாவது டெஸ்டில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இங்கிலாந்து அணி டெஸ்ட் வரலாற்றில் தனது அதிகபட்ச ரன்களை ‘சேஸ்’ செய்து சாதனை படைத்தது.
இங்கிலாந்து மண்ணில் கடந்த ஆண்டு இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. முதல் நான்கு போட்டிகளின் முடிவில் இந்தியா 2-1 என முன்னிலையில் இருந்தது. கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்ட ஐந்தாவது டெஸ்ட், பர்மிங்காமில் நடந்தது.
முதல் இன்னிங்சில் இந்தியா 416, இங்கிலாந்து 284 ரன் எடுத்தன. இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணி 245 ரன் எடுத்தது. பின் 378 ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இரண்டாவது இன்னிங்சை துவக்கிய இங்கிலாந்து அணி, நான்காவது நாள் முடிவில் 3 விக்கெட்டுக்கு 259 ரன் எடுத்து, 119 ரன் பின்தங்கி இருந்தது. பேர்ஸ்டோவ் (72), ஜோ ரூட் (76) அவுட்டாகாமல் இருந்தனர்.
மீண்டும் ஏமாற்றம்
இன்று ஐந்தாவது, கடைசி நாள் ஆட்டம் நடந்தது. சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்த இருவரும் சதம் விளாசினர். இவர்களை பிரிக்க இந்திய அணி கேப்டன் பும்ரா எடுத்த எந்த முயற்சிக்கும் கடைசி வரை பலன் கிடைக்கவே இல்லை. இங்கிலாந்து அணி உணவு இடைவேளைக்கு முன், இரண்டாவது இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கு 378 ரன் எடுத்து, 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டெஸ்ட் தொடர் 2-2 என்ற கணக்கில் சமன் ஆனது.
Advertisement