உலகநாயகன் கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படத்தை பார்த்துவிட்டு பா.ஜ.க.வின் சட்டப்பேரவை உறுப்பினர் வானதி சீனிவாசன் ட்வீட் செய்துள்ளார்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு கமல்ஹாசன் நடிப்பில் வெளியான ‘விக்ரம்’ திரைப்படம் ஒருமாதத்தை கடந்தும் திரையரங்குகளில் வரவேற்பைப் பெற்று வருகிறது. இதனால் ஷங்கரின் ‘2.O’ படத்திற்குப் பிறகு, கோலிவுட்டில் ‘விக்ரம்’ படம் தான் வசூல் வேட்டையாடி வருகிறது. திரையரங்குகளில் இன்றும் வரவேற்பு கிடைத்து வரும்நிலையில், சிங்கப்பூர், ஐக்கிய அரபு அமீரக நாடுகள், பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில், கோலிவுட்டிலே அதிக வசூலை ஈட்டியப் படமாக ‘விக்ரம்’ படம் சாதனை படைத்துள்ளது. இதுவரை சுமார் 420 கோடிக்கும் மேலாக இந்தப் படம் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இந்தப் படத்தை திரையரங்கில் பார்த்துவிட்டு கோவை தெற்கு தொகுதியின் பா.ஜ.க. எம்.எல்.ஏ.வான வானதி சீனிவாசன் ட்விட்டரில், கமல்ஹாசனுக்கு வாழ்த்து தெரிவித்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், “தேர்தல் களத்தில் உங்களை வெற்றி பெற்றதற்கு மீண்டும் ஒரு முறை மகிழ்கிறேன். விக்ரம் திரைப்படம் பார்த்தேன். உங்கள் கலை பணியால் தொடர்ந்து மக்களை மகிழ்விக்க வாழ்த்துகள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
Feeling happy to have won you in Assembly Elections.
Watched #Vikram! Keep entertaining us Mr.@ikamalhaasan!
தேர்தல் களத்தில் உங்களை வெற்றி பெற்றதற்கு மீண்டும் ஒரு முறை மகிழ்கிறேன்.#விக்ரம் திரைப்படம் பார்த்தேன்.
உங்கள் கலை பணியால் தொடர்ந்து மக்களை மகிழ்விக்க வாழ்த்துக்கள். pic.twitter.com/lr7Oi0WI19
— Vanathi Srinivasan (@VanathiBJP) July 4, 2022
கடந்த ஆண்டு நடைபெற்று முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் முதல்முறையாக கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிட்டது. அப்போது மிகுந்த அந்தக் கட்சி மீது மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், அக்கட்சி போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் தோல்வியடைந்தது. இதில் வெற்றிபெற்று சட்டப்பேரவைக்குள் செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட கமல்ஹாசன், முதலில் வெற்றிபெறும் தருவாயில் இருந்தநிலையில், கடைசி நேரத்தில் கோவை தெற்கு தொகுதியில் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் பா.ஜ.க.வின் வானதி சீனிவாசனிடம் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.