பீஜிங் : இரண்டு ஆண்டுகளுக்குப் பின் சர்வதேச பயணியர் விமான சேவைக்கு, சீனா மீண்டும் அனுமதி அளித்துள்ளது.
கொரோனா பரவலைத் தொடர்ந்து, 2019ல் சர்வதேச பயணியர் விமான சேவைக்கு சீனா தடை விதித்தது. இந்நிலையில் சீனாவில் கொரோனா பரவல் குறைந்துள்ளதால் மீண்டும் சர்வதேச பயணியர் விமான சேவையை அனுமதிப்பதாக சீனா அறிவித்துள்ளது. அதே நேரத்தில், இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நிறுத்தியுள்ள இந்தியா உடனான பயணியர் விமான சேவையை மீண்டும் அனுமதிப்பது குறித்து சீனா இன்னும் அறிவிக்கவில்லை.
இந்தியாவைச் சேர்ந்த, 23 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் சீனாவில் மருத்துவம் படிக்கின்றனர். அவர்கள், ‘விசா’ கட்டுப்பாடு காரணமாக மீண்டும் சீனா திரும்ப முடியாமல் உள்ளனர். இந்தியாவின் கோரிக்கையை ஏற்று, இந்திய வல்லுனர்கள், மாணவர்கள் உள்ளிட்டோருக்கான விசா கட்டுப்பாடுகளை, கடந்த மாதம் சீனா நீக்கியது. இதையடுத்து அவர்கள் சீனா திரும்ப தயாராக உள்ளனர்.
ஆனால், இந்தியா – சீனா இடையே நேரடி பயணியர் விமான போக்குவரத்துக்கு இன்னும் அனுமதி வழங்காததால், அவர்களால் சீனா செல்ல முடியாத நிலை உள்ளது. மூன்றாவது நாடு வழியாக சீனா செல்வது அதிக செலவாகும் என்பதால் பலர், சீனா, இந்திய விமான சேவைக்கு மீண்டும் அனுமதி வழங்கும் என்ற எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர்.
Advertisement