இந்தியாவைப் பொறுத்தவரை தற்போது பொதுமக்களுக்கு காப்பீடு பாலிசிகள் எடுப்பதில் நல்ல விழிப்புணர்வு ஏற்பட்டு உள்ளன.
குறிப்பாக எல்ஐசியில் உள்ள நல்ல திட்டங்களில் பொதுமக்கள் முதலீடு செய்ய ஆரம்பித்துள்ளனர்.
அந்த வகையில் ஒரு சில ஆண்டுகளில் கோடீஸ்வரர் ஆக வேண்டுமென்றால் எல்.ஐ.சியில் உள்ள மிகச்சிறந்த திட்டங்களில் இணைந்து பயன் பெறலாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.
எல்.ஐ.சி காப்பீடு திட்டம்
இந்தியர்கள் பெரும்பாலும் காப்பீடு திட்டத்தில் முதலீடு செய்யும் போது எல்ஐசி நிறுவனத்தை முதல் முதல் வாய்ப்பாக பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். எல்ஐசி நிறுவனம் பல்வேறு வயதினருக்கு பல வகையிலான காப்பீடு திட்டங்களை வழங்கி வருகிறது.
பங்குச்சந்தையால் பாதிப்பு இல்லை
எல்ஐசி பாலிசியின் வட்டி விகிதம் பங்குச்சந்தை நகர்வுகளால் பாதிக்கப்படுவதில்லை என்பது முக்கியமான அம்சம். பங்குச்சந்தை மிகப்பெரிய சரிவில் இருந்த போதிலும் எல்ஐசி நிறுவனத்தின் முதலீடுகள் பாதுகாப்பாக இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
எல்ஐசி ஜீவன் சிரோமணி பாலிசி
இந்த நிலையில் எல்.ஐ.சி நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட சிறப்பான பாலிசிகளில் ஒன்று எல்ஐசி ஜீவன் சிரோமணி பாலிசி. தனிநபர் ஆயுள் காப்பீட்டுத் திட்டமான இந்த பாலிசியில் குறைந்தபட்ச முதிர்வு தொகை ஒரு கோடி.
ரூ.1 கோடி
ஜீவன் சிரோமணி பாலிசி ரூ. 1 கோடிக்கான முதிர்வு தொகையை வழங்குகிறது. மேலும் பாலிசிதாரர் நான்கு ஆண்டுகளுக்கு மட்டுமே இந்த பாலிசியில் முதலீடு செய்ய வேண்டும். எல்ஐசி ஜீவன் சிரோமணி பாலிசி நான்கு முதிர்வுகளைக் கொண்டுள்ளது. அவை 14, 16, 18 மற்றும் 20 ஆண்டுகள். இந்த பாலிசிக்காக பாலிசிதாரர் மாதாந்திர பிரீமியமாக ரூ.94,000 செலுத்த வேண்டும்.
பாலிசி விதிமுறைகள்
எல்ஐசி ஜீவன் ஷிரோமணி பாலிசி திட்டத்தில் பாலிசிதாரர் பாலிசி காலத்தின் போது நிர்ணயிக்கப்பட்ட ஒவ்வொரு காலத்திற்கும் உயிருடன் இருந்தால், அடிப்படைத் தொகையின் ஒரு நிலையான சதவீதம் வழங்கப்படும். வெவ்வேறு பாலிசி விதிமுறைகளுக்கான நிலையான விகிதம் பின்வருமாறு:
1. பாலிசி காலம் 14 ஆண்டுகள்: 10வது மற்றும் 12வது பாலிசி ஆண்டில் அடிப்படைத் தொகையில் 30% கிடைக்கும்.
2. பாலிசி காலம் 16 ஆண்டுகள்: 12 மற்றும் 14வது பாலிசி ஆண்டில் அடிப்படைத் தொகையில் 35% கிடைக்கும்.
3. பாலிசி காலம் 18 ஆண்டுகள்: 14 மற்றும் 16வது பாலிசி ஆண்டில் அடிப்படைத் தொகையில் 40% கிடைக்கும்.
4. பாலிசி காலம் 20 ஆண்டுகள்: 16 மற்றும் 18வது பாலிசி ஆண்டில் அடிப்படைத் தொகையில் 45 சதவீதம் செலுத்தப்படுகிறது.
கடன் வசதி
எல்ஐசி ஜீவன் ஷிரோமணி திட்டத்தின் கீழ், குறைந்தபட்சம் ஒரு முழு வருட பிரீமியத்தை செலுத்தி ஒரு பாலிசி ஆண்டை முடித்த பிறகு, சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு கடன் வசதியும் கிடைக்கும்.
வயது விபரங்கள்
எல்ஐசி ஜீவன் ஷிரோமணி திட்டத்தில் இணைய பாலிசிதாரருக்கு குறைந்தபட்சம் 18 வயது இருக்க வேண்டும். 14 வருட பாலிசி எடுக்க அதிகபட்ச வயது வரம்பு 55 வயதும், 16 வருட பாலிசி எடுக்க 51 வயதும், 18 வருட பாலிசி எடுக்க 48 வயதும், 20 வருட பாலிசி எடுக்க 45 வயதும் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. பாலிசிதாரர் முதிர்வு நேரத்தில் 69 வயதுக்கு மேல் இருக்க முடியாது.
Invest this LIC Policy plan and become crorepati in four years!
Invest this LIC Policy plans and become crorepati in four years! | நீங்கள் கோடீஸ்வரர் ஆக வேண்டுமா? இந்த எல்.ஐ.சி பாலிசிகளில் முதலீடு செய்யுங்கள்!