சொத்து வரி நோட்டீஸ் தாமதமாக வந்ததா? சென்னை மக்கள் என்ன செய்ய வேண்டும்?

சென்னை மாநகராட்சி தற்போது சொத்து வரி குறித்த நோட்டீஸ்களை தபால் மூலம் அனுப்பி வருகிறது.

இந்த நிலையில் சொத்து வரி தொடர்பான நோட்டீஸ் தாமதமாக வந்தால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

இந்த விளக்கத்தை அடுத்து சொத்து வரி செலுத்தும் சென்னை மக்களின் அனைத்து சந்தேகங்களும் தீர்ந்துள்ளதாக கருதப்படுகிறது.

சென்னை மாநகராட்சி

சென்னை மாநகராட்சி தற்போது புதிய சொத்து வரியை வசூலிக்கும் பணியை தொடங்கியுள்ளது. இதன்படி ஒவ்வொரு சொத்தின் மதிப்பு ஆய்வு செய்யப்பட்டு அது குறித்த அறிவிப்புகள் தபால் மூலம் சொத்து உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் ஆக அனுப்பப்பட்டு வருகிறது.

சொத்து வரி நோட்டீஸ்

சொத்து வரி நோட்டீஸ்

6 லட்சத்திற்கும் மேற்பட்ட சொத்து உரிமையாளர்களுக்கு சீராய்வு அறிவிப்புகள் வழங்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த ஜூன் மாதம் 27ஆம் தேதி இந்த நோட்டீஸ்களை அனுப்பும் பணியை சென்னை மாநகராட்சி தொடங்கி உள்ளது.

15 நாட்களுக்குள் வரி
 

15 நாட்களுக்குள் வரி

சென்னை மாநகராட்சி அனுப்பிய நோட்டீஸ் கிடைத்த 15 நாட்களுக்குள் வரி செலுத்த வேண்டுமென்றும் கூடுதலாக 15 நாட்களுக்கு மேல் முறையீடு செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. சில சமயம் சென்னை மாநகராட்சி அனுப்பிய நோட்டீஸ்கள் தாமதமாக கிடைத்து வரும் நிலையில் சொத்து வரி செலுத்தும் கடைசி தேதி குறித்து மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இதுகுறித்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

மாநகராட்சி அதிகாரிகளின் விளக்கம்

மாநகராட்சி அதிகாரிகளின் விளக்கம்

சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறிய விளக்கத்தில் சொத்துவரி நோட்டீஸ் தபால் மூலம் அனைவருக்கும் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது என்றும் எந்த தேதியில் மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியது மற்றும் சொத்து உரிமையாளர்கள் எந்த தேதியில் நோட்டீசை பெற்றனர் என்ற தகவல் அனைத்தும் மாநகராட்சி இடம் இருக்கும் என்றும் தெரிவித்து உள்ளனர்.

15 நாட்கள் மேல்முறையீடு

15 நாட்கள் மேல்முறையீடு

எனவே பொதுமக்கள் தங்களுக்கு அந்த நோட்டீஸ் கிடைத்த 15 நாட்களை கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் தங்களுக்கு சொத்துவரி நோட்டீஸ் கிடைத்த நாளிலிருந்து 15 நாட்களுக்குள் அவர்கள் சொத்து வரியை செலுத்தி கொள்ளலாம் என்றும் கூடுதலாக 15 நாட்கள் மேல்முறையீடு செய்து கொள்ளலாம் என்றும் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறியுள்ளனர்.

செலுத்தும் முறைகள்

செலுத்தும் முறைகள்

சென்னை மாநகராட்சியில் உள்ள சொத்து உரிமையாளர்கள் சொத்து வரியினை எந்தெந்த வகையில் செலுத்தலாம் என்ற விபரங்களையும் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறியுள்ளனர். அவை பின்வருமாறு:

1. சென்னை மாநகராட்சி வருவாய் அலுவலர் என்ற பெயரில் காசோலை அல்லது டிமாண்ட் டிராப்ட் எடுத்து சொத்துவரி செலுத்தலாம்.

2. வரி வசூலிக்க வருபவர்களிடம் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு மூலம் செலுத்தலாம்.

3. www.chennaicorporation.gov.in என்ற இணையதளம் மூலம் எந்தவிதமான கட்டணமும் இல்லாமல் சொத்து வரியை செலுத்தி கொள்ளலாம்.

4. அதேபோல் ஒருசில வங்கிகளிலும் சென்னை மாநகராட்சியின் சொத்து வரியை வசூல் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

5. ‘பேடிஎம்’ மற்றும் ‘நம்ம சென்னை’ ஆகிய மொபைல் செயல்கள் மூலமாகவும் சொத்து வரி செலுத்த வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

6. பாரத் பில் பேமெண்ட் சிஸ்டம் (BBPS) மூலமாகவும் சொத்து வரியை செலுத்தலாம்.

7. சென்னையில் உள்ள அனைத்து இ-சேவை மையங்களிலும் சொத்து வரி செலுத்த வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நடவடிக்கை

நடவடிக்கை

மேற்கண்ட வகைகளில் குறிப்பிட்ட காலத்திற்குள் சொத்து வரியை செலுத்தி மாநகராட்சி அதிகாரிகளின் நடவடிக்கைகளை தவிர்த்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

What we do if property tax notice received in delay from Chennai corporation?

What we do if property tax notice received in delay from Chennai corporation? | சொத்து வரி நோட்டீஸ் தாமதமாக வந்ததா? சென்னை மக்கள் என்ன செய்ய வேண்டும்?

Story first published: Wednesday, July 6, 2022, 7:45 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.