தென்மேற்கு பாகிஸ்தானில் கொட்டித் தீர்த்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி பெண்கள், குழந்தைகள் உட்பட 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதுகுறித்து, மாகாண பேரிடர் மேலாண்மை வெளியிட்டுள்ள அறிக்கையில், பலுசிஸ்தான் மாகாணத்தில் பெய்த கனமழையால் திடீர் வெள்ளம் ஏற்பட்டது.
ஒரே இரவில் பெய்த மழையில் வீடுகளின் மேற்கூரைகள் இடிந்து விழுந்ததில், 7 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், வெள்ளத்தில் சிக்கி மாயமானவர்களை தேடும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.