மட்டக்களப்பு விமான நிலையத்தை விமான பயிற்சியகமாக மாற்றுவதற்கு அமைச்சரவை இணக்கம்


மட்டக்களப்பு விமான நிலையத்தை விமான பயிற்சியகமாக மாற்றுவதற்கு
அமைச்சரவை இணக்கம் வெளியிட்டுள்ளது.

அமைச்சரையில் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைய இதற்கான இணக்கம்
வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

யோசனை சமர்ப்பிப்பு

இந்த யோசனையை சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சர்
சமர்ப்பித்துள்ளார். 

ஏற்கனவே 2018 ஆம் ஆண்டு மட்டக்களப்பு விமான நிலையம் உள்ளூர் விமான
சேவைகளை மேற்கொள்வதற்கான தளமாக மாற்றி அமைக்கப்பட்டது.

மட்டக்களப்பு விமான நிலையத்தை விமான பயிற்சியகமாக மாற்றுவதற்கு அமைச்சரவை இணக்கம் | Cabinet Decision About Batticaloa Air Port

இலங்கை விமான படையும், வீதி அபிவிருத்தி அதிகார சபையும் இணைந்து
இந்த விமான தளத்தை உள்ளூர் சேவகளுக்காக தயார்படுத்தியிருந்தன.

எனினும் இதுவரைகாலமும் அந்த விமான தளத்திலிருந்து எவ்வித
வருமானங்களும் பெறப்படவில்லை.

முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் கடன்! வழங்கப்பட்டது அமைச்சரவை அனுமதி 

வருமானம் பெற நடவடிக்கை

இதனையடுத்தே அந்த விமான தளத்தை வருமானம் பெறக்கூடிய தளமாக
மாற்றியமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.

இதன் அடிப்படையிலேயே அமைச்சரவையின் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக
தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மட்டக்களப்பு விமான நிலையத்தை விமான பயிற்சியகமாக மாற்றுவதற்கு அமைச்சரவை இணக்கம் | Cabinet Decision About Batticaloa Air Port



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.