டிசிஎஸ் நிறுவனத்திற்கு அமெரிக்க நீதிமன்றம் 140 மில்லியன் டாலர் அபராதம் விதித்துள்ளது. இந்த தொகை இந்திய மதிப்பில் சுமார் ரூ.1,100 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.
எபிக் சிஸ்டம் நிறுவனத்தின் இந்த வழக்கு அமெரிக்க நீதிமன்றத்தில் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.
இனி கடன் வாங்கவே கூடாதுன்னு நினைக்கிறீங்களா.. அப்படின்னா 3 விஷயங்களை மறக்காம செய்யுங்க!
இந்த வழக்கில் எபிக் சிஸ்டம் நிறுவனத்தின் முக்கிய தகவல்களை திருடி விட்டதாக டிசிஎஸ் மீது குற்றம் சாட்டப்பட்டது.
எபிக் சிஸ்டம் நிறுவனம்
எபிக் சிஸ்டம் நிறுவனம் தொடர்ந்த அறிவுசார் திருட்டு வழக்கில் எபிக் சிஸ்டம் நிறுவனத்தின் ஆவணங்களை தவறாக பயன்படுத்தவில்லை என்றும் அந்த ஆவணங்களால் தங்கள் நிறுவனத்திற்கும் எந்தவித பயனும் இல்லை என்று டிசிஎஸ் வாதிட்டது.
டிசிஎஸ் நிறுவனத்திற்கு அபராதம்
ஆனால் டிசிஎஸ் நிறுவனம் குற்றம் செய்தது உறுதி செய்யப்பட்டது என கூறிய அமெரிக்க நீதிமன்றம் டிசிஎஸ் நிறுவனத்திற்கு 940 மில்லியன் டாலர் இழப்பீடு தர வேண்டும் என கடந்த 2014ஆம் ஆண்டு உத்தரவிட்டது. இந்த தொகை இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ரூ.7400 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.
மேல்முறையீடு
இந்த உத்தரவை எதிர்த்து டிசிஎஸ் நிறுவனம் மேல்முறையீடு செய்த நிலையில் 2017 ஆம் ஆண்டு மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு வெளியானது. இந்த தீர்ப்பில் எபிக் சிஸ்டம்ஸ் நிறுவனத்திற்கு டிசிஎஸ் 470 மில்லியன் டாலர் அபராதம் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டது.
மீண்டும் மேல்முறையீடு
ஆனால் இந்த உத்தரவை எதிர்த்து டிசிஎஸ் மீண்டும் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மேல் முறையீட்டு வழக்கில் தீர்ப்பு தற்போது வெளிவந்துள்ளது. இந்த தீர்ப்பில் டிசிஎஸ் நிறுவனம் 140 மில்லியன் டாலர், எபிக் சிஸ்டம் நிறுவனத்திற்கு செலுத்த வேண்டும் என்று அபராத தொகையை குறைத்து உத்தரவிட்டுள்ளது.
மீண்டும் ஒருமுறை மேல்முறையீடா?
இந்த தகவலை டிசிஎஸ் நிறுவனம் தனது அறிக்கையில் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அறிவுசார் சொத்துக்களை திருடியதாக டிசிஎஸ் நிறுவனத்திற்கு 140 மில்லியன் டாலர் அபராதம் விதிக்கப்பட்ட நிலையில் இந்த தீர்ப்புக்கும் எதிராக டிசிஎஸ் நிறுவனம் மீண்டும் மேல்முறையீடு செய்ய வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.
US Court imposes $140-Million Fine on TCS In Epic systems case
US Court imposes $140-Million Fine on TCS In Epic systems case | திருட்டு வழக்கில் சிக்கிய டிசிஎஸ்.. ரூ.1,100 கோடி அபராதம் போட்ட அமெரிக்க நீதிமன்றம்..!