திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகர கூட்டுறவு வங்கியில் சுமார் 8.4 கிலோ போலியான நகை வைத்து நகைக் கடன் மோசடி செய்த சம்பவத்தில், கூட்டுறவு சங்க நிர்வாகக் குழுவைக் கலைத்து கூட்டுறவு இணை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
ஆரணி டவுன் தேவிகாபுரம் சாலையில் ஆரணி நகர கூட்டுறவு வங்கியின் கிளை இயங்கி வருகிறது.
கடந்த ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக-அதிமுக கட்சிகள் 5 சவரன் வரை நகை தள்ளுபடி செய்வதாக வாக்குறுதி அளித்தனர்.
இதையடுத்து, வங்கி நகை மதிப்பீட்டாளர் மோகன் என்பவர் போலியான தங்க நகை வைத்து கையாடல் செய்தது உறுதியானது.
மேலும், கடந்த ஆண்டு நடைபெற்ற நகைக் கடன் மோசடியில், வங்கி மேலாளர் உள்பட 4 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.