அதிமுக பொதுக்குழு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. மேலும், அதிமுக பொதுக்குழுவில் இடம் பெற்றுள்ள 10க்கும் மேற்பட்டோர் இணைந்து இந்த மனுவை தாக்கல் செய்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கு விசாரணை இன்று காலை தொடங்கியது. அதில், உட்கட்சி விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் தலையிட்டது சட்டத்திற்கு எதிரானது என்று ஈபிஎஸ் தரப்பு வாதிட்டது.
அப்போது நீதிபதிகள், “சென்னை உயர்நீதிமன்றத்தின் அதிகாரத்தை நாங்கள் எடுத்துக் கொள்ள முடியாது. உட்கட்சி விவகாரத்தில் ஓர் எல்லைக்கு மேல் தலையிட முடியாது. சென்னை உயர்நீதிமன்றத்தின் தனி நீதிபதி, உட்கட்சி விவகாரத்தில் தலையிட முடியாது என்று தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.
கேள்விகள் :
எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் நடக்கும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தலையிட விரும்பவில்லை.
அதே சமயத்தில் பொதுக்குழுவில் தீர்மானங்கள் நிராகரிக்கப்பட்டதில் என்ன நீதிமன்ற அவமதிப்பு இருக்கிறது?
பொதுக்குழுவை எப்படி நடத்த வேண்டும் என்று நீதிமன்றம் வழிகாட்ட முடியாது?
அதிமுகவின் கட்சி விவகாரங்களை நீதிமன்றங்களுக்கு கொண்டு வந்தது ஏன்?
அறிவுரை :
நட்போ, சண்டையோ உங்களுக்குள் நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள். உங்கள் கட்சி தொடர்பான எல்லா பிரச்சனைகளையும் பொதுக்குழுவில் விவாதங்கள் செய்யுங்கள், நீதிமன்றத்தில் விவாதிக்காதீர்கள்” என்று நீதிபதிகள் அறிவுரை வழங்கினர்.
அதிரடி உத்தரவுகள் :
!. வரும் 11 ஆம் தேதி நடக்கும் அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை இல்லை.
2. ஓபிஎஸ் தரப்பு பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நடந்து கொண்டிருக்கும் நிலையில், அந்த வழக்குக்கு இடக்கால தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
3. ஜூன் 23ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு தொடர்பாக இரு நீதிபதிகள் அமர்வு பிறப்பித்த உத்தரவுக்கும் தடைவிதிப்பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
(23 தீர்மானங்கள் தவிர வேறு எந்த தீர்மானங்களையும் நிறைவேற்ற கூடாது என்று என்ற உயர்நீதிமன்றத்தின் உத்தரவை மீறியதாக அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இப்போது உச்சநீதிமன்றம் அந்த வழக்கிற்கும் இடைக்கால தடை உத்தரவை பிறப்பித்துள்ளது)