பிரித்தானிய நிதியமைச்சர் பதவியை ராஜினாமா செய்த ரிஷி யார்? மகாராணியை விட அதிக சொத்து கொண்ட அவர் மனைவி


பிரித்தானியாவின் நிதியமைச்சர் பதவியில் இருந்து ரிஷி சுனக் ராஜினாமா செய்துள்ளது பெரும் விவாத பொருளாக மாறியுள்ளது.

பதவி விலகல் முடிவை அறிவித்தது தொடர்பாக ரிஷி சுனக் கூறுகையில், அரசாங்கம் சரியாக, திறமையாக மற்றும் தீவிரமாக நடத்தப்படும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பு என்று தெரிவித்தார்.

இரண்டாண்டுகளாக பிரித்தானியாவின் நிதியமைச்சராக ரிஷி பதவி வகித்திருக்கிறார்.

இந்திய வம்சாவளி நபரான ரிஷி சுனக், இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தியின் மருமகன் ஆவார்.

தனது தாத்தா, பாட்டி காலத்தில் பிரித்தானியாவுக்கு இடம்பெயர்ந்தது ரிஷியின் குடும்பம். ரிஷி பிறந்ததே சவுத்தாம்ப்டன் நகரில்தான். ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் தத்துவம் பயின்றார் ரிஷி.

பிரித்தானிய நிதியமைச்சர் ரிஷி சுனக், சுகாதார செயலாளர் சஜித் ஜாவித் திடீர் ராஜினாமா!

பிரித்தானிய நிதியமைச்சர் பதவியை ராஜினாமா செய்த ரிஷி யார்? மகாராணியை விட அதிக சொத்து கொண்ட அவர் மனைவி | Rishi Sunak Finance Minister Post Family

அடுத்ததாக, ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ படித்தபோது, நாராயணமூர்த்தியின் மகள் அக்‌ஷதாவை சந்தித்து 2009-ல் திருமணம் செய்துகொண்டார்.

இவர்களது திருமணம் பெங்களூருவில் நடைபெற்றது. தன் மாமனாரைப் போல் தொழிலதிபராக அறியப்படும் இவர், பிரித்தானியாவில் வாழும் இரண்டாம் தலைமுறை இந்தியர். காட்மாரான் வென்ச்சர்ஸ் நிறுவனத்தின் இயக்குநராக இருந்தபடி, தன் மனைவியுடன் இணைந்து ஒரு டெக்ஸ்டைல் வடிவமைப்பு நிறுவனத்தை நடத்திவந்தார்.

வடக்கு யார்க்‌ஷையர் ரிச்மாண்டு பகுதி மிகப்பெரிய கிராமியம் சார்ந்த பாராளுமன்றத் தொகுதி. இந்தத் தொகுதியில் 26 ஆண்டுகளாக கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த வில்லியம் ஹாக் பாராளுமன்ற உறுப்பினராக இருந்துவந்தார்.

அவர், 2014-ம் ஆண்டு ஜூலை மாதத்துடன் பதவி விலகியதுடன், ஒட்டுமொத்த அரசியலிலிருந்தும் ஓய்வுபெற்றார். அந்த இடத்துக்கான தேர்தல் 2015-ம் ஆண்டு மே மாதம் நடைபெற்றது.

பிரித்தானிய நிதியமைச்சர் பதவியை ராஜினாமா செய்த ரிஷி யார்? மகாராணியை விட அதிக சொத்து கொண்ட அவர் மனைவி | Rishi Sunak Finance Minister Post Family

theconversation

அதில், ஏற்கெனவே கன்சர்வேட்டிவ் கட்சி செல்வாக்காக உள்ள நிலையில், அக்கட்சி சார்பாக ரிஷி சுனக் போட்டியிட்டு, மொத்தம் 27,744 வாக்குகளைப் பெற்று அபார வெற்றிபெற்றார்.

சில ஆண்டுகளாக அக்கட்சியின் எம்.பி-யாகச் செயல்பட்டவர், நிதியமைச்சராவதற்கு முன் வீட்டு வசதி, உள்ளாட்சித்துறை இணை அமைச்சராகவும் இருந்துள்ளார்.

கடந்த தேர்தல் வெற்றிக்கு பின்னர் ரிஷிக்கு இணை அமைச்சர் பதவி கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், எதிர்பாராத திருப்பமாக ஜாவித் ராஜினாமா செய்ய, நிதித்துறை அமைச்சர் அதிகாரம் ரிஷியைத் தேடி வந்தது.

பிரித்தானிய நிதியமைச்சர் பதவியை ராஜினாமா செய்த ரிஷி யார்? மகாராணியை விட அதிக சொத்து கொண்ட அவர் மனைவி | Rishi Sunak Finance Minister Post Family

ரிஷியின் மனைவி அக்சதா மூர்த்தி. இவருக்கு சொந்த தொழில்கள் இருக்கும் போதிலும், இன்ஃபோசிஸில் அவரது பங்குதான் அவரது செல்வத்தின் பெரும்பகுதியை உருவாக்குகிறது.

அதன்படி அவரின் சொத்துமதிப்பு £500 மில்லியன் என தெரிகிறது. இது பிரித்தானிய மகாராணியின் சொத்து மதிப்பை விட அதிகமாகும்.
அதே போல ரிஷி – அக்சதாவின் மொத்த சொத்து மதிப்பை கூட்டாக சேர்த்தால் £730 மில்லியன் வரும் என தெரியவந்துள்ளது.  

பிரித்தானிய நிதியமைச்சர் பதவியை ராஜினாமா செய்த ரிஷி யார்? மகாராணியை விட அதிக சொத்து கொண்ட அவர் மனைவி | Rishi Sunak Finance Minister Post Family

Twitter/AkshataMurthy



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.