மதுரையைச் சேர்ந்த கவிஞரும், ஆவணப்பட இயக்குநருமான லீனா மணிமேகலை இயக்கத்தில் `காளி’ என்கிற டெலி ஃபிலிம் எடுக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி விமர்சனத்துக்குள்ளானது.
அதில் காளி வேடத்தில் இருக்கும் பெண் புகை பிடிப்பது போல் இருப்பதற்கு, இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. டெல்லி காவல்துறை மணிமேகலை மீது வழக்குப்பதிவும் செய்துள்ளனர்.
இதையடுத்து, போஸ்டர் குறித்து மணிமேகலை விளக்கம் அளித்திருந்தார். இதனிடையே கோவையைச் சேர்ந்த சஷ்டி சேனா என்கிற இந்து இயக்கத்தின் தலைவி அதிரடி சரஸ்வதி,
கடந்த சில நாள்களுக்கு முன்பு ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். அதில் மணிமேகலைக்கு கடும் கண்டனம் தெரிவித்ததுடன், கொலை மிரட்டலும் விடுத்திருந்தார்.
இந்த வீடியோவும் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து செல்வபுரம் காவல்நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் போலீஸார் விசாரித்து வந்தனர். இந்நிலையில் ஆபாசமாக பேசுதல்,
கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிந்து போலீஸார் சரஸ்வதியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.