Asus ROG Phone 6: கேமிங் விரும்பியா நீங்கள்? முன்னும் பின்னும் டிஸ்ப்ளே… இதுல வேற லெவல் அம்சங்கள் இருக்கு மக்களே!

Asus ROG Phone 6 Specifications: கேமிங் பிரியர்கள் மத்தியில் அதிகம் பேசப்படும் ROG Phone 6 சீரிஸ் போன்களை Asus நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்த தொடரில் நிறுவனம் Asus ROG Phone 6, Asus ROG Phone 6 Pro என இரண்டு அதிதிறன் கொண்ட ஸ்மார்ட்போன்களை கொண்டுவந்துள்ளது.

ROG Phone 6 ஆனது Phantom Black, Storm White ஆகிய இரு நிறங்களில் வருகிறது. இந்தியாவில் Asus ROG Phone 6 விலை ரூ.71,999 ஆகவும், Asus ROG Phone 6 Pro விலை ரூ.89,999 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த இரண்டு ஆசஸ் போன்களின் அம்சங்கள் ஏறக்குறைய ஒரே மாதிரியானவை.

Apple iPhone: 10 மாதங்களாக ஆற்றில் கிடந்த ஐபோன் – எடுத்து பாத்தப்போ..?

ஆசஸ் ரோஜ் 6 அம்சங்கள் (ASUS ROG Phone 6 Features)

6.78 இன்ச் முழு எச்டி+ அமோலெட் 165 ரெப்ரெஷ் ரேட் டிஸ்ப்ளேகுவால்காம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 புராசஸர்12ஜிபி / 18ஜிபி ரேம்256ஜிபி / 512ஜிபி ஸ்டோரேஜ்6,000mAh பேட்டரி, 65W பாஸ்ட் சார்ஜிங்50MP கொண்ட மூன்று பின்புற கேமரா12MP செல்ஃபி கேமராஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான ROG UIIPX4 பாதுகாப்பு

Asus ROG Phone 6 மற்றும் Asus ROG Phone 6 Pro சிறப்புகளை காணலாம்

டிஸ்ப்ளே
– இரண்டு போன்களும் 6.78 இன்ச் முழு HD + AMOLED டிஸ்ப்ளே, 165Hz ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்தைக் கொண்டுள்ளது.

வடிவமைப்பு
– ROG Phone 6 Pro ஆனது போனின் பின்புறத்தில் சிறிய ROG Vision PMOLED டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. கேமிங்கின் போது கட்டுப்படுத்த ஏர்டிரிகர் அல்ட்ராசோனிக் பட்டனுடன் ப்ரோ பதிப்பு வருகிறது.

புராசஸர்
– இந்த இரண்டு போன்களும் அதிதிறன் கொண்ட Snapdragon 8+ Gen 1 சிப்செட் ஆதரவுடன் வருகிறது.

Telecom: 100 ரூபாய்க்கும் குறைவான 3 ரீசார்ஜ் திட்டங்கள்; தினசரி 2ஜிபி டேட்டா!

மெமரி
– இரு போன்களுக்கும் இடையே உள்ள வேறுபாடு முக்கியமாக சேமிப்பகத்தின் அடிப்படையில் உள்ளது. ROG போன் 6 12ஜிபி ரேம், 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் ஆதரவுடன் வருகிறது. ROG போன் 6 ப்ரோவில், நிறுவனம் 18ஜிபி ரேம், 512ஜிபி உள்ளடக்க மெமரி வழங்கப்பட்டுள்ளது.

கேமரா
– இரண்டு போன்களும் டிரிபிள் கேமரா அமைப்புடன் வருகின்றன. இது 50-மெகாபிக்சல் சோனி IMX766 பிரதான கேமரா, 13-மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் கேமரா, 5-மெகாபிக்சல் மேக்ரோ கேமரா ஆகியவற்றைக் கொண்டுள்ளது. முன்புறத்தில் 12 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.

Father of Cell Phone: செல்போனை கண்டுபிடித்தவர், அதனை இவ்வளவு நேரம் தான் பயன்படுத்துகிறார்… ஆனால் நாமோ!

பேட்டரி
– இரண்டு போன்களும் சக்திவாய்ந்த 6000mAh பேட்டரியுடன், 65 வாட் வேகமான சார்ஜிங் ஆதரவுடன் வருகின்றன.

இயங்குதளம்
– ஃபோன்கள் Android 12 அடிப்படையிலான ROG UI ஸ்கின் மூலம் இயங்குகிறது

Pixel 6a Launch: ஜூலை இறுதியில் இந்தியா வரும் கூகுள் பிக்சல் 6ஏ ஸ்மார்ட்போன்! விலை என்ன தெரியுமா?

மேலும், இந்த இரண்டு ஆசஸ் போன்களும் நீர் மற்றும் தூசி புகா பாதுகாப்பிற்கான IPX4 மதிப்பீட்டைப் பெற்றுள்ளன. மேலும், இந்த போன்கள் கேமிங் பிரியர்களுக்கென பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் கேம்கூல் 6 கூலிங் சிஸ்டம் இருப்பதால், நீண்ட நேரம் கேம் விளையாடினாலும் மொபைல் சூடாகாது.

Asus-ROG-Phone-6 விவரங்கள்முழு அம்சங்கள்ஃபெர்பார்மன்ஸ்Qualcomm SM8250 Snapdragon 865+ (7 nm)டிஸ்பிளே6.59 inches (16.73 cm)சேமிப்பகம்128 GBகேமரா64 MP + 13 MP + 5 MPபேட்டரி6000 mAhஇந்திய விலை41025ரேம்12 GBமுழு அம்சங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.