விழுப்புரத்தில் மின்வாரிய அதிகாரி விஷம் சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தேனி மாவட்டத்தில் உள்ள கம்பம் பகுதியை சேர்ந்த சதீஷ்குமார்(50), விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் செயற்பொறியாளராக பணிபுரிந்து வந்தார்.
இவர் குடும்பத்துடன் விழுப்புரத்தில் உள்ள கமலா கண்ணப்பன் நகரில் தங்கி உள்ளார். இந்நிலையில் நேற்று மாலை பணி முடிந்தபின் 7 மணி அளவில் வீட்டிற்கு சென்ற அவர் சிறிது நேரத்தில் வாந்தி எடுத்துள்ளார்.
இதையடுத்து அவருடைய மனைவி, சதீஷ்குமாரிடம் ஏன் வாந்தி எடுத்தீர்கள் என்று கேட்டதற்கு எலிபேஸ்ட் சாப்பிட்டதாக தெரிவித்துள்ளார்.
இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த சதீஷ்குமாரின் மனைவி அக்கம் பக்கத்தில் உதவியுடன் சதீஷ்குமாரை விழுப்புரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார்.
பின்னர் அவரை மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், சதீஷ்குமார் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து விழுப்புரம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து, சதீஷ்குமார் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.