சீன கடன் வலையில் சிக்கும் பங்களாதேஷ்.. ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு 4 சீன அரசு நிறுவனங்கள் போட்டி!

இந்தியாவின் அண்டை நாடான பங்களாதேஷ் கடந்த 10 வருடத்தில் மிகப்பெரிய வளர்ச்சியைப் பொருளாதாரம், வர்த்தகத்தில் பதிவு செய்துள்ளது.

இந்நிலையில் வேகமாக வளர்ச்சி அடைய வேண்டும் என்ற தாகம் பங்களாதேஷ்-யிடம் சற்று அதிகமாக இருக்கும் காரணத்தால் நாட்டின் இன்பராஸ்டக்சர் திட்டத்திற்குச் சீனாவின் நிதியுதவியை நாட முடிவு செய்துள்ளது.

ஏற்கனவே சீன கடன் வலையில் சிக்கிய இலங்கை, இங்கிலாந்து, பாகிஸ்தான், ஆப்பிரிக்காவின் பல நாடுகள் உதாரணமாக இருக்கும் போதும் பங்களாதேஷ் சீனாவுடன் கை கோர்க்கக் காத்திருக்கிறது.

டெஸ்லா முடிந்தது, இனி நாங்க தான்.. கெத்து காட்டும் சீன நிறுவனம்..!

பங்களாதேஷ்

பங்களாதேஷ்

பங்களாதேஷ் நாட்டின் தனி நபர் வருமானத்தின் அளவீட்டில் 2021ஆம் ஆண்டில் சற்றும் எதிர்பார்க்காத வகையில் இந்தியாவை முந்தி உலக நாடுகளுக்கு அதிர்ச்சி கொடுத்தது, ஆனால் 2022ஆம் நிதியாண்டின் அளவீட்டில் இந்தியா மீண்டும் பங்களாதேஷ் நாட்டைப் பின்னுக்குத் தள்ளியுள்ளதாகப் பொருளாதார வல்லுனர்கள் கூறினாலும், குறுகிய காலகட்டத்தில் எப்படிப் பங்களாதேஷ் வேகமாக வளர்ந்துள்ளது என்பதை இந்திய மாநிலங்கள் கற்றுக்கொள்ள வேண்டியது முக்கியம்.

பங்களாதேஷ் சிட்டகாங் பகுதி

பங்களாதேஷ் சிட்டகாங் பகுதி

இந்நிலையில் பங்களாதேஷ் சிட்டகாங் பகுதியில் ஸ்மார்ட் சிட்டி உடன் கூடிய மெட்ரோ ரயில் நெட்வொர்க்-ஐ அமைக்கத் திட்டமிட்டு உள்ளது. இந்தத் திட்டத்தைக் கைப்பற்ற 4 முன்னணி சீன அரசு நிறுவனங்கள் விண்ணப்பம் அளித்துள்ளது.

ஸ்மார்ட் சிட்டி மற்றும் மெட்ரோ ரயில்
 

ஸ்மார்ட் சிட்டி மற்றும் மெட்ரோ ரயில்

இதைவிட முக்கியமாகச் சிட்டகாங் ஸ்மார்ட் சிட்டி மற்றும் மெட்ரோ ரயில் திட்டத்தைச் சீன நிறுவனங்கள் தங்களது சொந்த பணத்தில் கட்டித்தருவதாகவும், இதற்கு மாறாக ஸ்மார்ட் சிட்டியில் விற்பனை செய்யப்படும் பிளாட்-களில் இருந்து ஒரு பகுதி லாபத்தைத் தர வேண்டும் என டிமாண்ட்-ஐ வைத்துள்ளது.

சுற்றுச்சூழல் பாதிப்பு

சுற்றுச்சூழல் பாதிப்பு

ஆனால் இந்தத் திட்டம் மூலம் சுற்றுச்சூழல்-க்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் எனக் கூறுகின்றனர். இவர்களுக்குப் பதில் அளிக்கும் விதமாக 4 சீன அரசு நிறுவனங்கள் கட்டுமான பகுதியில் இருக்கும் நிலத்தில் ஏற்படும் பாதிப்புகளை உயர் தொழில்நுட்பத்தைக் கொண்டு சரி செய்வதாக உறுதி அளித்துள்ளது.

சீனா உடனான கூட்டணி

சீனா உடனான கூட்டணி

இதேவேளையில் சீனா பிற நாட்டுத் திட்டங்களில் சொல்வது ஒன்று, செய்வது ஒன்றாக இருக்கும் நிலையில் சீன அரசு நிறுவனங்கள் உடனான கூட்டணி ஆபத்து என்று கருத்துகளை முன்வைத்து வருகின்றனர்.

சீன மக்கள்

சீன மக்கள்

சொந்த பணத்தைக் கொண்டு மெட்ரோ ரயில் திட்டத்தை நிறுவும் சீன நிறுவனங்கள் கட்டுமானத்திற்குப் பின்பும் சீன நிறுவனம், அதிகாரிகள், ஊழியர்கள் மெட்ரோ ரயில் திட்டத்தை நிர்வாகம் செய்வதற்காகப் பங்களாதேஷ் நாட்டிலேயே தங்குவார்கள். மெட்ரோ ரயில் மெயின்டனென்ஸ் பணிகளைச் சீன நிறுவனம் ஒரு போதும் பங்களாதேஷ் நாட்டு அரசு அல்லது நிறுவனங்களிடம் கொடுக்காது என்று கருத்து நிலவுகிறது.

டிராபிக்

டிராபிக்

மேலும் சீனா நிறுவனங்கள் எப்போதும் சொன்ன தேதிக்குள் பணிகளை முடிக்காது என்பது உலகுறிந்த விஷயமாக இருக்கும் நிலையில் சிட்டகாங் பகுதியில் சீன நிறுவனம் கட்டும் மெட்ரோ ரயில் திட்டம் மூலம் டிராபிக் பிரச்சனை நீண்ட காலம் இருக்கும், இதனால் பங்களாதேஷ் நாட்டின் வர்த்தகப் போக்குவரத்தில் பாதிக்கப்படும், மேலும் சிட்டகாங் ஏற்கனவே மக்கள் தொகை அதிகம் கொண்ட பகுதி எனத் தெரிவித்துள்ளனர் அந்நாட்டு வல்லுனர்கள் கூறுகின்றனர்.

 சிட்டகாங் துறைமுகம்

சிட்டகாங் துறைமுகம்

உண்மையில், சீனா பங்களாதேஷ் நாட்டின் இத்திட்டத்தைக் கைப்பற்ற மிகவும் ஆர்வம் காட்டுவதற்கு முக்கியமான காரணம் சிட்டகாங் துறைமுகம் தான். வேகமாக வளர்ந்து வரும் பங்களாதேஷ் நாட்டின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வர்த்தகத்திற்குச் சிட்டகாங் துறைமுகம் தான் முக்கியத் தளம்.

இலங்கை உதாரணம்

இலங்கை உதாரணம்

இத்திட்டத்தின் வாயிலாகச் சிட்டகாங் துறைமுகத்தில் ஆதிக்கம் செலுத்தி பங்களாதேஷ்-ஐ கடன் வலைக்குள் சிக்க வைத்து இதைக் கைப்பற்றுவதற்காகத் தான் என அந்நாட்டு வல்லுனர்கள் கூறுகின்றனர். சொல்லப்போனால் இலங்கையிலும் துறைமுகத் திட்டத்தின் வாயிலாகத் தான் சீனா நுழைந்தது குறிப்பிடத்தக்கது.

ராணுவ ஆயுதம்

ராணுவ ஆயுதம்

பங்களாதேஷ் நாட்டிற்கு ஆயுதம் அளிக்கும் முன்னணி நாடாகச் சீனா விளங்குகிறது. சீனா இதுவரை 2 நீர்மூழ்கிக் கப்பல், ஏவுகணை, துப்பாக்கி, பைடட்ர் ஜெட் விமானம் எனப் பலவற்றைக் கொடுத்துள்ளது. ஆனால் இதில் பல கோளாறு செய்கிறது, குறிப்பாக 053H3 ஃப்ரிகேட்ஸ், K-8W பைட்டர் விமானம் ஆகியவை கோளாறு காரணமாகத் தரைதட்டி நிற்கிறது.

கடன் வலை

கடன் வலை

நீண்ட காலமாகப் பங்களாதேஷ் நாட்டைச் சீனா தனது கடன் வலையில் விழ வைத்து வருகிறது. ஆனால் இந்த ஸ்மார்ட் சிட்டி மற்றும் மெட்ரோ ரயில் திட்டம் மிகப்பெரிய டிராப் என விமர்சிக்கப்படுகிறது. ஆனால் இறுதி முடிவு பங்களாதேஷ் நாட்டின் கையில் உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Is Bangladesh next in China debt-trap list; 4 China govt cos interest in Metro Rail and Smart City

Is Bangladesh next in China debt-trap list; 4 China govt cos interest in Metro Rail and Smart City சீன கடன் வலையில் சிக்கும் பங்களாதேஷ்.. ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு 4 சீன அரசு நிறுவனங்கள் போட்டி..!

Story first published: Wednesday, July 6, 2022, 13:39 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.