ஆன்லைன் ஃபுட் டெலிவரி செய்யும் செயலிகளில் பல நேரங்களில் வித விதமான குளறுபடிகள் நடைபெறுவது வாடிக்கை. எப்போதும் உணவகங்கள், டெலிவரி ஊழியர்கள் தரப்பில் இருந்து நடக்கும் வேடிக்கையான, குளறுபடிகளான சம்பவங்களே சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வைரலாகும்.
மாறாக வாடிக்கையாளரின் தவறால் நிகழ்ந்த சம்பவம் தொடர்பான வாட்ஸ்அப் சாட்ஸ் தான் தற்போது நெட்டிசன்களிடையே வைரலாகியிருக்கிறது.
ஜித்து என்ற ட்விட்டர் பயனர் ஒருவர் தனது பெற்றோருடனான வாட்ஸ்அப் சாட் ஸ்க்ரீன் ஷாட்டை பகிர்ந்து, “ரோஸ்டட் சிக்கன் வாங்கி சாப்பிடலாம் என நினைத்து நான் தான் ரோஸ்ட் ஆகியிருக்கேன்” என கேப்ஷன் இட்டுள்ளார்.
ஸ்விக்கி மூலம் ரோஸ்டட் சிக்கனை வாங்கி சாப்பிடலாம் என எண்ணி வீட்டு முகவரிக்கு பதில் வேறு இடத்திற்கு ஜித்து ஆர்டர் போட்டிருக்கிறார். ஆனால் அதனை அறிந்த ஜித்து உடனடியாக ஸ்விக்கி அதிகாரிகளிடம் பேசி அதற்கான பணத்தை ரீஃபண்ட் பெற்றிருக்கிறார்.
Wanted to eat roasted chicken but got roasted instead pic.twitter.com/mV4DBjGXNH
— Jitu (@JituGalani5) July 2, 2022
இதனை ஜித்துவும் அவரது பெற்றோரும் இருக்கும் வாட்ஸ் அப் குரூப்பில் தெரிவித்திருக்கிறார். அதில் “தப்பான அட்ரெஸுக்கு ஃபுட் ஆர்டர் போட்டுட்டேன். ஆனா ஸ்விக்கி அந்த பணத்த ரீஃபண்ட் பன்னிட்டாங்க” என ஜித்து கூற, அதற்கு அவரது அப்பா, “நீ தெரியாமல் தவறாக ஆர்டர் பன்னிட்ட. ஆனா பணம் எனக்கு வரலையே” எனக் கேள்வி கேட்டிருக்கிறார்.
அப்பா, மகனின் இந்த சாட்டிங்கின் போது ஜித்துவின் அம்மா சிரிப்பு ஸ்மைளியை போட்டுவிட்டு சென்றுவிட்டார். பின்னர் ஜித்துவை அந்த குரூப்பில் இருந்து அவரது அப்பா ரிமூவ் செய்திருக்கிறார்.
இந்த சாட்டை பார்த்த நெட்டிசன்ஸ், உங்க அப்பா இப்படிலாம் சாட் பண்றாங்களே, எங்க அப்பாலாம் வெறும் தம்ப்ஸ் அப் போட்டுட்டு போய்டுவார் என ஒருவர் தனது ஆதங்கத்தை தெரிவிக்க, ஜித்து அப்பாவின் மெசேஜ் சேவேஜ் லெவலில் இருக்கிறது என மற்றொருவர் குறிப்பிட்டிருக்கிறார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM