சன் டிவி-யில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ரோஜா சீரியல் டிஆர்பி-இல் தொடர்ந்து முன்னிலையில் இருக்கிறது. இந்த சீரியலில் சிபு சூர்யன், பிரியங்கா நல்கார், விஜே அக்ஷயா, காயத்ரி சாஸ்திரி, ராஜேஷ் உள்பட பலர் நடித்து வருகின்றனர்.
தினமும் பல்வேறு புதிய திருப்பங்களுடன் ஒளிபரப்பாகும் ரோஜா சீரியல், சமீபத்தில் 5ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்தது.
இதில் ரோஜாவாக நடிக்கும் பிரியங்கா நல்காரிக்கு தமிழகத்தில் ஒரு ரசிக பட்டாளமே இருக்கிறது. ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் பிறந்த பிரியங்கா, முதலில் தெலுங்கு திரையுலகில் அறிமுகமாகி, பின்னர் சீரியல்களில் நடித்தார். தற்போது, ரோஜா சீரியல் மூலம் தமிழகம் முழுவதுமுள்ள ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துவிட்டார்.
ரோஜா சீரியலில் துறுதுறு பொண்ணாக வரும் பிரியங்கா, நிஜ வாழ்க்கையிலும் அப்படித்தான்.
இந்நிலையில் பிரியங்கா நல்காரி சமீபத்தில் ஐபிசி மங்கை யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்தார். அதில், ரசிகர்கள், பிரியங்கா குறித்து தெரிந்து கொள்ள விரும்பும் விஷயங்கள் குறித்து கேட்கப்பட்டன. அந்த அனைத்து கேள்விகளுக்குமே, பிரியங்கா அமைதியாக சிரித்த முகத்துடன் பதிலளித்தார்.
பிரியங்கா பேசுகையில்; எனக்கு பேய் படங்கள் ரொம்ப பிடிக்கும். நன் படம் பார்த்து ரொம்ப பயந்தேன். மகாபலிபுரம் பீச் வியூ ரெஸ்டாரண்ட் ரொம்ப பிடிக்கும். அங்க உக்காந்துட்டு அப்படியே பீச் பாத்துட்டே சாப்பிடுவேன். எப்போவும் குடும்பத்தோட தான் சுத்துவேன்.
எங்களுக்கு நேரம் கிடைக்கிறதே ரொம்ப கஷ்டம். நேரம் கிடைச்சா, முதல்ல ஹெட் மசாஜ் தான் பண்ணுவேன். அப்புறம் டான்ஸ் கிளாஸ் போவேன். ரொம்ப ஹெவியா எல்லாம் வொர்க் அவுட் பண்ண மாட்டேன். எனக்கு ஃபிட்-ஆ இருக்கணும், அதுக்காக லைட் வொர்க் அவுட்ஸ் பண்ணுவேன்.
கொழுப்பு உணவு எதையும் சாப்பிட மாட்டேன். ஸ்பிரவுட்ஸ், முட்டை, கிரில் ஃபிஷ், பிரவுன் ரைஸ், பிளாக் ரைஸ், ரெட் ரைஸ், கினோவா ரைஸ், வேகவைத்த காய்கறிகள் தான் சாப்பிடுவேன்.
பொதுவா வெளியே சாப்பிட மாட்டேன். எப்பவும் வீட்டு சாப்பாடுதான். நானே சமைச்சு, ஷூட்டிங் எடுத்துட்டு போய் சாப்பிடுவேன். எப்போவாவது தான், வெளியே சாப்பிடுவேன். எனக்கு நான் சமைக்கிறது எல்லாமே பிடிக்கும். அதுலயும் வெண்டைக்காய் பொரியல் என்னோட ஃபேவரைட்.
வீட்டுல இருக்கும்போது வீடு சுத்தமா வச்சுப்பேன். டிரெஸ் வாஷ் பண்ணுவேன். செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சுவேன். என்னோட மேக்-அப் பேக்ஸ் எல்லாம் சரி பண்ணுவேன். நிறைய கொலோபரேஷன்ஸ் வரும். அதெல்லாம் வீடியோஸ் போடுவேன். எனக்கு கோயில் போறது ரொம்ப பிடிக்கும். சென்னையில பீச் தான் ரொம்ப பிடிக்கும்.
எனக்கு படிக்கிறது ரொம்ப பிடிக்கும். ஆனா, நான் ரொம்ப படிக்கல. உங்களுக்கு வாய்ப்பு இருந்தா, நல்ல படிங்க. படிச்சு முடிச்சதுக்கு அப்புறம் உங்களுக்கு என்ன புடிச்சுருக்கோ, அதை பண்ணுங்க. என் தங்கச்சி கிட்ட கூட அதுதான் சொல்லுவேன். அவ டிகிரி முடிச்ச பிறகுதான், நடிக்கலாமானு என்கிட்ட கேட்டா.
யார் என்ன சொன்னாலும், மனசுல வச்சுக்காதீங்க. உங்களுக்கு பிடிச்சதை நீங்க பண்ணுங்க. ஏன்னா இது உங்களோட வாழ்க்கை. ஆனா, நம்ம பிடிச்சது பண்ணும்போது மத்தவங்களுக்கு வலிக்கக் கூடாது என்று கொஞ்சும் தமிழில் பேசினார் பிரியங்கா நல்காரி.
ஐபிசி மங்கை யூடியூப் சேனலுக்கு பிரியங்கா நல்காரி அளித்த பேட்டியி வீடியோ இதோ!
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“