மும்பை: மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் கேப்டனாக ஷிகர் தவான் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்திய அணி மேற்கிந்திய தீவுகள் அணியுடன் 3 ஒருநாள் போட்டியில் பங்கேற்க உள்ளது. இதற்கான 16 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. இதில் ஷிகர் தவான் கேப்டானாகவும், ரவீந்திர ஜடேஜா துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.