iPhone 14 release date and price: விரைவில் வெளியாகக் காத்திருக்கும் ஆப்பிள் ஐபோன் 14 தொடரின் வருகை குறித்து பயனர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இது தொடர்பான விவாதங்களும் கடந்த சில நாள்களாக நடந்து வருகிறது. நிறுவனம் இந்த ஆண்டு அக்டோபர் மாத இறுதிக்கும் ஐபோன் 14-ஐ அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால், அறிமுகத்திற்கு முன்பே, போனின் விலை, சிறப்பம்சங்கள் வெளியாகின. Apple iPhone 14 தொடரின் கீழ் iPhone 14, iPhone 14 Max, iPhone 14 Pro, iPhone 14 Pro Max ஆகிய ஸ்மார்ட்போன்கள் அறிமுகப்படுத்தப்படும். இந்த மொபைலின் அதிகாரப்பூர்வ வெளியீட்டிற்கு இன்னும் நாள்கள் இருந்தாலும், அதற்கு முன்னரே முன்பதிவு தொடங்கியுள்ளது.
Apple iPhone: 10 மாதங்களாக ஆற்றில் கிடந்த ஐபோன் – எடுத்து பாத்தப்போ..?
தனிப்பயனாக்கப்பட்ட பிரத்யேக ஐபோன் தயாரிப்பாளரான கேவியர் குளோபல் ஐபோன் 14 தொடரின் முன்பதிவைத் தொடங்கியுள்ளது. கேவியர் குளோபல் (Caviar Global) ஒரு பிரபலமான Customized ஐபோன் தயாரிப்பாளர் ஆகும். நிறுவனம் உயர்தர ஐபோன்களை தயாரித்து வெளியிடுகிறது.
இப்போது கேவியர் குளோபல் ஆப்பிள் ஐபோன் 14 தொடரின் முன்பதிவைத் தொடங்கியுள்ளது. மேலும், முதலில் முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு போனை தருவதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. காரணம் சிறிய அளவில் மட்டுமே ஆப்பிள் செல்போன்களை தயாரிக்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
ஐபோன் 14 விலை (iPhone 14 Price in India)
இந்த தனிப்பயனாக்கப்பட்ட ஐபோன் 14-ஐ முன்பதிவு செய்ய நீங்கள் நினைத்தால், விலையையும் முன்பே தெரிந்து கொள்ளுங்கள். கேவியர் பிரீமியம் சாதனங்களை உற்பத்தி செய்கிறது. தனிப்பயனாக்கப்பட்ட iPhone 14 தொடர் ஷாம்பெயின் பதிப்பின் விலை $9,520 டாலராக உள்ளது. அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ.7லட்சத்து 55ஆயிரம் இதற்காக நீங்கள் செலவிட வேண்டியிருக்கும்.
Nothing Phone (1) Price: நத்திங் போன் (1) விலை வெளியாகியது… அதிர்ச்சியில் ஸ்மார்ட்போன் நிறுவனங்கள்!
கோல்ட் ஷாம்பெயின் கிரிஸ்டல் வகையின் விலை, $24,950 டாலராக உள்ளது. இது இந்திய மதிப்பில் 19லட்சத்து 79ஆயிரமாக இருக்கும். தலைசுற்றி மயக்கமடைய வேண்டாம்; நிறுவனம் 18 காரட் தங்கம், கோல்டன் ஸ்டிங்ரே தோல், டைட்டானியம், வைரங்கள் போன்ற விலை உயர்ந்த உலோகங்கள், கற்களைப் பயன்படுத்தி iPhone 14-ஐ உருவாக்குகிறது என்பது சிறப்பாகத் தானே இருக்கும்.
99 போன்கள் மட்டுமே தயாரிக்கத் திட்டம்
இந்த போனில் கேவியர் கிரீடம் லோகோவைக் கொண்டிருக்கும். சாதனத்தின் விலை மாதிரியைப் பொறுத்து மாறுபடும். மேலும், சேமிப்பிற்கு ஏற்ப விலையும் அதிகரிக்கும். மிக முக்கியமாக இந்த போன் உங்களுக்கு தேவைப்பட்டால், உடனடியாக ப்ரீ ஆர்டர் செய்வது நல்லது. காரணம், வெறும் 99 போன்களை மட்டுமே நிறுவனம் தயாரிக்க திட்டமிட்டுள்ளது.