விருதுநகர்: எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமான அரசு ஒப்பந்ததாரரான செய்யாதுரை மற்றும் அவரது மகன்கள் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர். வரி ஏய்ப்பு புகாரில் மதுரை வருமான வரித்துறை அதிகாரிகள் 10க்கும் மேற்பட்டோர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். கட்டுமான நிறுவன உரிமையாளர் செய்யாதுரையின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட 5 இடங்களில் வரித்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர்.