பிரெஞ்சு கிராமம் ஒன்றில், இரண்டு ஆசிரியர்கள், ஒரு ஆணும் ஒரு பெண்ணும், சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தின் பின்னால் ஒரு காதல் கதை இருக்கலாம் என கருதப்படுகிறது.
பிரான்சிலுள்ள Tarbes என்ற நகரத்தில் அமைந்துள்ள பள்ளி ஒன்றில் பணியாற்றிய ஒரு ஆசிரியரும், ஆசிரியையும், திங்கட்கிழமை மதியம் Pouyastruc என்ற கிராமத்தில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்கள்.
அவர்களைத் துப்பாக்கியால் சுட்ட மர்ம நபர் ஒருவர் தப்பியோடிய நிலையில், அவர் இதுவரை கைது செய்யப்படவில்லை என பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.
இதற்கிடையில், பெயர் வெளியிட விரும்பாத ஒருவர், இது ஒரு காதல் பிரச்சினையால் நடந்த இரட்டைக் கொலையாக இருக்கலாம் என்று கூறியுள்ளார். துப்பாக்கியால் சுட்ட நபர், 30 வயதுகளிலிருக்கும் ஒருவர் என்றும், அவர் கொல்லப்பட்ட ஆசிரியையின் முன்னாள் காதலன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆக, அந்தப் பெண் புதிய காதலனைத் தேடிக்கொண்டதால், பழிக்குப்பழி வாங்குவதற்காக, அந்த ஆசிரியையின் முன்னாள் காதலன் இருவரையும் சுட்டுக் கொன்றிருக்கலாம் என கருதப்படுகிறது.
பொலிசார் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.