புதுடில்லி: மத்திய அமைச்சர் பதவியில் இருந்து முக்தர் அப்பாஸ் நக்வி ராஜினாமா செய்தார். அவர் துணை ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ., சார்பில் களமிறக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வியின் ராஜ்யசபா எம்.பி., பதவி நாளையுடன்(ஜூலை 7) முடிவுக்கு வருகிறது. ஆனால், அவர் எம்.பி.,யாக மீண்டும் தேர்வு செய்யப்படவில்லை. முக்தர் அப்பாஸ் நக்வி துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி வந்தது.
இந்நிலையில், முக்தர் அப்பாஸ் நக்வி, மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இன்று நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்ற அவர், பிரதமர் மோடியை சந்தித்த பின்னர், பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். நக்வியின் பணியை பிரதமர் பாராட்டி உள்ளார்.
புதுடில்லி: மத்திய அமைச்சர் பதவியில் இருந்து முக்தர் அப்பாஸ் நக்வி ராஜினாமா செய்தார். அவர் துணை ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ., சார்பில் களமிறக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.பா.ஜ.,வைச்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.