எஸ்.பி.வேலுமணி ஆதரவாளர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை

Income Tax raid at SP velumani supporter Chandrasekar house: அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு நெருக்கமானவரும், ’நமது அம்மா’ நாளிதழ் வெளியீட்டாளருமான எஞ்ஜீனியர் சந்திரசேகர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

கோயம்புத்தூர் வடவள்ளி பகுதியைச் சேர்ந்தவர் சந்திரசேகர். இவர் கோவை புறநகர் தெற்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளராக இருந்து வருகிறார். இவரது மனைவி சர்மிளா கோவை மாநகராட்சி 38 ஆவது வார்டு கவுன்சிலராக உள்ளார்.

இதையும் படியுங்கள்: உச்ச நீதிமன்றத்தில் ஓ.பி.எஸ்-க்கு பின்னடைவு: பொதுக்குழு நடத்த தடை இல்லை

முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் தீவிர ஆதரவாளரான சந்திரசேகர், அ.தி.மு.க.,வின் அதிகாரப்பூர்வ நாளேடான ’நமது அம்மா’ நாளிதழின் வெளியீட்டாளரும் கூட.

இந்தநிலையில், கோவை வடவள்ளி பகுதியில் உள்ள சந்திரசேகரின் வீட்டில், இன்று காலை முதல் வருமானவரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்த சோதனையை ஓட்டி சந்திரசேகர் வீட்டிற்கு முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ஏற்கனவே முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் வீட்டில் இரண்டு முறை லஞ்ச ஒழிப்புத்துறை  சோதனையிட்டபோது சந்திரசேகரின் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. அவரது வீடு மற்றும் அலுவலகங்களிலும் அப்போது சோதனை நடந்த நிலையில், தற்போது, மீண்டும் வருமான வரித்துறையினர் சந்திரசேகரின் வீட்டில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.