ஆவண பட இயக்குநர் லீனா மணிமேகலையை மிரட்டும் வகையில் சாமியார் ஒருவர் வீடியோ வெளியிட்டுள்ளார்.
ஆவண பட இயக்குநர் லீனா மணிமேகலை காளி என்ற ஆவணப்படத்தை இயக்கியுள்ளார். இதன் போஸ்டர் சமீபத்தில் வெளிவந்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதன் போஸ்டரில் காளி புகைப்பிடிப்பது போன்று இருந்தது, இந்த போஸ்டருக்கு பல தரப்பில் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியது. இதனை அடுத்து arrest leena manimekalai” என்ற ஹேஸ்டேக் பலரால் பகிரப்பட்டது. இதற்கு லீனா விளக்கம் அளிக்கையில்,
ஒரு மாலைப்பொழுதில் கனடாவின் டொரோண்டோ நகரில் காளி தோன்றி வீதிகளில் உலா வரும்போது நடக்கிற சம்பவங்கள் தான் காளி ஆவணப்படம். படத்தைப்பார்த்தா “arrest leena manimekalai” hashtag போடாம “love you leena manimekalai” hashtag போடுவாங்க. “எனக்கு இழப்பதற்கு ஒன்றுமில்லை. இருக்கும் வரை எதற்கும் அஞ்சாமல் நம்புவதைப் பேசும் குரலோடு இருந்துவிட விரும்புகிறேன். அதற்கு விலை என் உயிர் தான் என்றால் தரலாம் என தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து, உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ஹனுமான் கோவிலில் சாமியார் ராஜூ தாஸ் மகாந்த் என்பவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அவர் உங்கள் தலையை உடலிலிருந்து பிரிக்க விரும்புகிறீர்களா?. இதுதான் உங்களுக்கு வேண்டும்?. என்ற கேள்வி எழுப்பியதோடு இந்த விஷயத்தில் மத்திய அரசு தலையிட வேண்டும் என தெரிவித்துள்ளார். அதோடு அந்த படத்திற்கு தடை விதிக்க வேண்டும் எனவும் கேட்டுகொண்டுள்ளார். இந்த வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.