விஜயபுரா : விஜயபுரா மணமகனுக்கும், அமெரிக்கா மணமகளுக்கும் ஹிந்து சம்பிரதாயப்படி திருமணம் நடந்தது.விஜயபுராவின் விஸ்வநாத் சிம்மலகி – ஷோபா தம்பதியின் மகன் ரவிகுமார், 31; வட அமெரிக்காவின் கனடாவில் பிரபல மென்பொருள் நிறுவனத்தில் மென்பொறியாளராக பணிபுரிகிறார்.கனடாவின் ரோஸ்மேரி பிளாட் – ஹாரி போலார்ட் தம்பதியின் மகள் சாரா, 39, அதே நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.
இருவரும் ஆரம்பத்தில் நண்பர்களாக பழகி வந்தனர். நாளடைவில் காதலாக மாறியது.இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டதால், திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர். இதற்கு மணமகன் வீட்டினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஒரு வழியாக பெற்றோரை ஒப்புக்கொள்ள வைத்தார்.இதையடுத்து, விஜயபுராவின் டவுன் ஹால் அரங்கில் நேற்று திருமணம் நடந்தது.மணமகள் கிறிஸ்துவர்; மணமகன் ஹிந்து மதத்தை சேர்ந்தவர்கள்.
ஆனால், ஹிந்து சம்பிரதாயப்படி இரு வீட்டார், நண்பர்கள், உறவினர்கள் புடைசூழ விமரிசையாக திருமணம் நடந்தது.மணமகள் சாரா, பட்டு சேலை உடுத்தி, நெற்றியில் குங்குமம், கைகளில் வளையல் அணிந்து பாரம்பரிய ஹிந்து பெண் போல வலம் வந்தது, ரவிகுமார் உறவினர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
Advertisement