இயக்குனர் லீனா மணிமேகலை இயக்கியுள்ள ஆவணப்படம் ‘காளி’.
இந்தப் படத்தின் போஸ்டர் கனடாவின் டொரோண்டோ நகரில் உள்ள ஆகா கான் அருங்காட்சியகத்தில் ஜூலை 2 ம் தேதி வெளியிடப்பட்டது.
இதில் சிகரெட் புகைத்தபடி காளி தனது மற்றொரு கையில் எல்ஜிபிடி எனும் ஓரின மற்றும் பாலின வரைமுறைக்கு அப்பாற்பட்ட இன சேர்க்கையாளர்களின் கொடியை பிடித்துக் கொண்டிருப்பது போன்று இருந்தது.
இதனால் அவருக்கு சமூக வலைதளத்தில் பலத்த எதிர்ப்பு எழுந்ததோடு அவரை கைது செய்யவேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது.
கனடாவில் உள்ள இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் இந்த போஸ்டரை அருங்காட்சியகத்தில் இருந்து அப்புறப்படுத்தவேண்டும் என்று கோரிக்கை வைப்பதாக இந்திய தூதரக அதிகாரிகள் கனடா அரசிடம் முறையிட்டனர்.
இந்த நிலையில், இந்திய அரசு கேட்டுக்கொண்டதால் ட்விட்டரில் லீனா மணிமேகலை பதிவிட்டிருந்த காளி படத்தின் போஸ்டர் நீக்கப்பட்டுள்ளதாக ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.