ஊழியர்களுக்கு ‘Free’ பாரீன் டூர்.. உலகின் பெஸ்ட் ‘பாஸ்’ இவர்தான்.. இன்ஸ்டாவில் செம டிரென்ட்..!

பெரும்பாலான நிறுவனங்கள் ஊழியர்களுக்கு லீவ் கொடுப்பது கூடத் தயங்கும் நிலையில், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஒரு நிறுவனத்தின் முதலாளி அனைத்து ஊழியர்களையும் 10 நாள் பாரின் டூர் அழைத்துச் சென்று ஊழியர்களின் மனத்தைக் கவர்ந்துள்ளார்.

இந்தப் பதிவு இன்ஸ்டாவில் டிரென்ட் ஆன நிலையில் அனைத்து மாத சம்பளக்காரர்களும் ரத்த கண்ணீர் வடிக்கும் நிலைக்குச் சென்றுள்ளனர். யாரு சாமி நீ..?

ஓவர் நைட்டில் தலைகீழாக மாறிய பிரிட்டன் அரசு.. ரிஷி சுனக் உட்பட 5 அமைச்சர்கள் ராஜினாமா..!!

2 வாரம் பாலி டூர்

2 வாரம் பாலி டூர்

ஆபீஸ்-ல் லீவ் கேட்பது கூடப் பிரச்சனையாக இருக்கும் பலருக்கு இந்தச் செய்தி உண்மையில் கசப்பாகத் தான் இருக்கும், ஆஸ்திரேலியா நாட்டின் சிட்னி நகரத்தை சேர்ந்த ஒரு மார்கெட்டிங் ஏஜென்சி நிறுவனத்தின் முதலாளி அனைத்து ஊழியர்களையும் 10 நாள், முழுமையாக 2 வாரம் இந்தோனேசியா-வின் பாலி-க்கு இலவசமாக டூர் அழைத்துச் சென்றுள்ளார்.

இன்ஸ்டாகிராம்

இன்ஸ்டாகிராம்

இந்தச் சுற்றுலாவின் போட்டோ, வீடியோ எனப் பலவற்றைச் சூப் ஏஜென்சி நிறுவனம் தனது இன்ஸ்டாகிராம்-ல் பதவிட்ட நிலையில், பலர் சூப் ஏஜென்சி நிறுவனத்தின் பாஸ் தான் இந்த உலகின் பெஸ்ட் பாஸ் எனப் பட்டத்தைக் கொடுத்து அழகு பார்க்கின்றனர். ஜூன் மாதம் போட்ட பதவு தற்போது வைரலாகியுள்ளது.

சூப் ஏஜென்சி
 

சூப் ஏஜென்சி

சூப் ஏஜென்சி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரான Katya Vakulenko தனது நிறுவனத்தில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களையும் 10 நாள் முழுவதும் விமானம், உணவு, ஹோட்டல், யோகா, சரக்கு, குவாட் பைகிங், எனப் பாலியில் கிடைக்கும் அனைத்து சேவைகளையும் இலவசமாகத் தனது ஊழியர்களுக்குக் கொடுத்துள்ளார்.

மீட்டிங்

மீட்டிங்

இதற்கிடையில் அவ்வப்போது கிளையன்ட் உடன் பேச வேண்டும் என்றாலோ, அல்லது திடீர் மீட்டிங் நடத்த வேண்டும் என்றாலோ அதுவும் நடந்துள்ளது. ஆனால் பெரும்பாலான நேரம் கொண்டாட்டம், கும்மாளமாகவே இருந்துள்ளது எனச் சூப் ஏஜென்சி ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

Katya Vakulenko

Katya Vakulenko

மேலும் கொரோனா எங்களுக்கு எப்படியெல்லாம் வேலை செய்ய முடியும் என்பதைக் கற்றுக்கொடுத்துள்ளது, எனவே இதை அடுத்தகட்டத்திற்குக் கொண்டு செல்ல 2 வார சுற்றுலாவிலும் பணியாற்ற முடிவு செய்து என்ஜாய் செய்கிறோம் எனச் சூப் ஏஜென்சி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரான Katya Vakulenko தெரிவித்துள்ளார்.

கிளீனர் டூ சிஇஓ.. மில்லியன் டாலர் சொத்து.. திகைக்க வைக்கும் அமீர்..!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Sydney Soup Agency took all employees free 2-Week Trip To Bali; Katya tagged world best boss

Sydney Soup Agency took all employees free 2-Week Trip To Bali; Katya Vakulenko tagged world’s best boss ஊழியர்களுக்கு ‘Free’ பாரீன் டூர்.. உலகின் பெஸ்ட் ‘பாஸ்’ இவர்தான்.. இன்ஸ்டாவில் செம டிரென்ட்..!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.