உடுப்பி : உடுப்பியின் குக்கிராமத்தை சேர்ந்த சினி ஷெட்டி, சமீபத்தில், ‘மிஸ் இந்தியா’ அழகியாக தேர்வு செய்யப்பட்ட நிலையில், உலக அழகி போட்டிக்கு தயாராகிறார்.உடுப்பி மாவட்டம், காபு தாலுகா, இன்னஞ்சே கிராமத்தைச் சேர்ந்தவர் சதானந்தா ஷெட்டி. இவரது மனைவி ஹேமா ஷெட்டி. இத்தம்பதியின் மகள் சினி ஷெட்டி, 21.அழகி போட்டிகளில் பங்கேற்று சாதித்து வரும் அவர், ஏப்ரல் 28ல், ‘மிஸ் கர்நாடகா’ அழகி பட்டம் வென்றார்.
.
பின், இரண்டு நாட்களுக்கு முன் மஹாராஷ்டிராவில் நடந்த போட்டியில், ‘மிஸ் இந்தியா’ அழகி பட்டத்தையும் வென்று அசத்தினார்.தற்போது, 71வது உலக அழகி போட்டியில் பங்கேற்கவுள்ளார். தந்தை ஹோட்டல் தொழில் செய்து வருகிறார்; சகோதரர் வெளிநாட்டில் படிக்கிறார்; தாய் அரவணைப்பில் போட்டிக்கு தயாராகிறார்.மாடலிங் மீது அதிக ஆர்வம் கொண்ட அவர், பல நிறுவனங்களின் துாதராக விளம்பரங்களில் நடிக்கிறார். ஹிந்தி சீரியலிலும் நடிக்கிறார். வாய்ப்பு கிடைத்தால் சினிமாவில் நடிக்க தயார் என்கிறார்..
முதுகலை பட்டப்படிப்பு முடித்து, மும்பையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். பரத நாட்டியம் கற்றுள்ளார். 4 வயதில் பரதம் கற்று, 14வயதில் அரங்கேற்றம் நடத்தினார்.தந்தை சதானந்த ஷெட்டி கூறியதாவது:என் மகள் மூன்று, நான்கு ஆண்டுகளாக மாடலிங் துறையில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். எங்களுக்கு மாடலிங் ஆவதில் விருப்பமில்லை. ஆனாலும், மகள் விருப்பத்தின் பேரில் ஒப்புகொண்டோம்.உலக அழகி பட்டம் வெல்வதே குறிக்கோள். பாட்டி துங்கம்மாவின் பெரும் ஆதரவால் தான் ‘மிஸ் இந்தியா’ பட்டம் வென்றார். வாய்ப்பு கிடைத்தால் சினிமாவில் நடிப்பார்.இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement