எதிர்காலத்தில் மண்ணெண்ணெய் விலை அதிகரிக்கலாம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் தெரிவித்துள்ளார்.
இன்றைய நாடாளுமன்ற அமர்வின்போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
எரிபொருளை கொண்டு வர நடவடிக்கை
இதேவேளை, எதிர்வரும் 15ஆம் திகதி பெட்ரோல் கப்பலை இலங்கைக்கு கொண்டு வருவதற்கு தேவையான ஏற்பாடுகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
எரிபொருள் தட்டுப்பாடு குறித்து அதிகாரிகள் கூறுவதை பொருட்படுத்தாது, எரிபொருள் பிரச்சினையால் மக்கள் இன்னமும் அவதிப்பட்டு வருகின்றனர்.
மேலும், ஐ.ஓ.சி. நிறுவனத்துக்கு சொந்தமான பெட்ரோல் நிலையங்களில் நீண்ட வரிசைகள் உள்ளன.
மக்களின் கலவரத்தால் இன்றும் பல பகுதிகளில் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகாமையில் கடும் குழப்ப நிலை ஏற்பட்டது.
இதேவேளை, வெல்லவாய நகரிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் கலவரத்தில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 13 பேரும் எதிர்வரும் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.