பொதுவாக நம்மில் பலர் காலை போதுமான நேரம் இல்லாமல் அல்லது நேரம் ஒதுக்க தவறி விட்டு இரவு நேரத்தில் உடற் பயிற்சி செய்வதுண்டு.
இது உண்மையில் சில பக்கவிளைவுகளை ஏற்படுத்து என்று சொல்லப்படுகின்றது. தற்போது அவை என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.
- இரவு நேரத்தில் உடற்பயிற்சி செய்வதால் அது தூக்கத்தை பாதிக்கும். மேலும் இது இதய ஆரோக்கியத்தை பாதிக்கும்.
- இரவு நேரத்தில் அனைத்து வேலைகளையும் முடித்து ஓய்வெடுக்க வேண்டும். ஆனால் உடற்பயிற்சி செய்வதால் புத்துணர்வுடன், தூக்கம் வராது
- இரவு நேரத்தில் உடற்பயிற்சி செய்வது, தூக்கமின்மை ஏற்படுத்தும் இதனால் பல்வேறு ஹார்மோன் குறைபாடுகள் வரும். ஹார்மோன் குறைபாடுகள், உடல் எடையை அதிகரிக்கும். உடல் எடை குறைப்பதற்காக உடற் பயிற்சி செய்தால் எந்த வித பலனும் இல்லாமல் இருக்கும்.
எந்த நேரம் சிறந்தது?
- உடற்பயிற்சி செய்வதற்கு ஏற்ற நேரம் காலை நேரம் தான். காலை நேரம் நீங்கள் எப்போதும் எழுந்திருக்கும் நேரத்திற்கு அரை மணி நேரம் முன்னதாக எழுந்தால் போதுமானது.
- உங்களது உடற்பயிற்சிகளை செய்து முடித்து விட்டு உங்களது நாளை புத்துணர்வுடன் தொடங்கலாம்.
- ஒரு நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருப்பதற்கு முதலில் உடற்பயிற்சி செய்வது நல்லது.