இந்தியாவிற்கு சட்டவிரோதமாக குடியேற முயற்சித்த குழுவொன்றை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
நேற்று (5) இரவு மன்னார் கடற்பரப்பில் வைத்து எட்டு பேர் கொண்ட குழுவை கைது செய்துள்ளனர்.
குறித்த குழுவில் ஐந்து ஆண்களும், ஒரு பெண் மற்றும் மூன்று குழந்தைகளும் அடங்குகின்றனர். இவர்கள்
மன்னார், வெலிமடை மற்றும் வவுனியாவைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
குழுவினர் மேலதிக சட்ட விசாரணைகளுக்காக மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
இவர்கள் இன்று மன்னார் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.