ஹெச்டிஎஃப்சி வங்கியுடன் வீட்டு வசதி கடன் நிறுவனமான ஹெச்டிஎஃப்சி இணைப்பதற்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை என இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
இதனை அடுத்து பாரத ஸ்டேட் வங்கிக்கு அடுத்ததாக மிகப் பெரிய வங்கியாக இந்தியாவில் ஹெச்டிஎஃப்சி வங்கி செயல்படப் போகிறது.
இந்த இணைப்பை அடுத்து அந்நிறுவனத்தின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்ன? வளர்ச்சிகள் என்ன? என்பதை நாடே மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறது.
எச்டிஎப்சி வங்கி
1977ஆம் ஆண்டு ஹஸ்முக்பாய் டி பரேக் என்பவர் எண்ணத்தில் தொடங்கப்பட்டது தான் ஹெச்டிஎஃப்சி வங்கி. தொடக்கத்தில் ஏராளமான தடைகள் இருந்ததை அடுத்து அந்த தடைகளை தாண்டி இந்த வங்கி மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்தது.
முதல் ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனம்
ஐசிசி என்ற இந்தியாவின் முன்னணி வங்கியில் உயர் பதவியில் இருந்து ஓய்வு பெற்ற ஹஸ்முக்பாய், தனது 66வது வயதில் இந்தியாவின் முதல் ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனத்தை நிறுவ முடிவு செய்தார். இந்தியர்கள் ஹவுசிங் ஃபைனான்ஸ் மூலம் ஏன் சொந்த வீடு வாங்க கூடாது என்று அவர் தன்னையே கேட்டுக் கொண்டதன் விளைவுதான் ஹெச்டிஎஃப்சி.
ஆசிய அளவில் வளர்ச்சி
1977ஆம் ஆண்டு திறக்கப்பட்டதும், நாட்டிலேயே முதல்முறையாக எந்தவித அரசாங்க உதவியும் இல்லாமல் தனது பயணத்தை ஹெச்டிஎஃப்சி தொடங்கியது. இந்தியாவில் மட்டுமல்ல ஆசிய பகுதிக்கும் இந்த வங்கி ஒரு முன்மாதிரியாக விளங்கியது.
மன்மோகன்சிங்
இதேபோல் 1994 ஆம் ஆண்டு ஹெச்டிஎஃப்சி வங்கி, ஹெச்டிஎஃப்சி லிமிடெட் மூலம் இணைக்கப்பட்டது. 1995ஆம் ஆண்டு முதல் கிளையை அப்போதைய நிதியமைச்சர் மன்மோகன் சிங் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. வங்கியும் அதே ஆண்டு பட்டியலிடப்பட்டது.
இணைப்பு
இந்தியாவைப் பொருத்தவரை வங்கித்துறையில் இணைப்புகள் என்பது அவ்வளவு எளிதானது அல்ல. ஒரு வங்கி இன்னொரு பெரிய நிறுவனத்துடன் இணைக்கப்படும் போது இணைப்புகள் பெரும்பாலும் அசாதாரணமாக நடந்து உள்ளது. ஆனால் ஹெச்டிஎஃப்சி மற்றும் ஹெச்டிஎஃப்சி வங்கிகள் ஒன்றிணைந்து இணைக்க முடிவு செய்யப்பட்டபோது அதன் செயல்பாட்டில் வணிக அளவு மற்றும் சொத்து மதிப்பின் அடிப்படையில் பாரத ஸ்டேட் வங்கிக்கு அடுத்தபடியாக வரும் என்று கூறப்பட்டது.
4வது மிக மதிப்புமிக்க நிறுவனம்
சந்தை மூலதனத்தை அடிப்படையில் 14.05 டிரில்லியன் என்ற அளவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்திற்கு அடுத்ததாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஏப்ரல் 4ஆம் தேதி எம்-கேப் தகவலின்படி ஹெச்டிஎஃப்சி வங்கியின் சந்தை மூலதனம் மட்டும் இந்தியாவில் 4வது மிக மதிப்புமிக்க நிறுவனமாக இருந்தது. ஹெச்டிஎஃப்சி வங்கி பாரத ஸ்டேட் வங்கிக்கு அடுத்த இடத்தில் உள்ளது.
முன்னோடி வங்கி
ஹெச்டிஎஃப்சி மற்றும் ஹெச்டிஎப்சி வங்கி இரண்டும் இந்தியாவின் வங்கி துறையில் மிகவும் பல ஆண்டுகளாக வணிகம் செய்து வருகின்றன. பஞ்சாப் நேஷனல் வங்கி, பாங்க் ஆப் இந்தியா, கனரா வங்கி, பேங்க் ஆஃப் பரோடா வங்கி ஆகியவை ஹெச்டிஎஃப்சி வங்கியை விட பழமையானதாக இருந்தாலும் சாதனையில் வெற்றி பெற்று முன்னோடியாக உள்ளது.
பிராண்ட்
ஹெச்டிஎஃப்சி பிராண்ட் ஏன் இவ்வளவு திறம்பட செயல்படுகிறது என்பதற்கு காரணங்கள் இருக்கின்றன. முக்கியக் காரணங்களாக கூறப்படுவது என்னவெனில் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களில் உள்ள நிலைத்தன்மை, கொள்கையின் நிலைத்தன்மை ஆகியற்றை கூறலாம். பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியிலும் இதே நிலை தான் இருக்கும்.
HDFC and HDFC Bank merger.. Another banking mammoth after SBI!
HDFC and HDFC Bank merger.. Another banking mammoth after SBI! | ஹெச்டிஎஃப்சி வங்கியுடன், வீட்டு வசதி கடன் நிறுவனம் ஹெச்டிஎஃப்சி இணைப்பு.. அடுத்தது என்ன?