ஜெனனிமா என்ற குழந்தையின் இன்ஸ்டிராகிரம் பக்கத்தை 1.72k ஃபாலோயர்கள் பின் தொடர்கிறார்கள். இந்த குழந்தையின் வீடியோக்களுக்கு 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் லைக் செய்திருக்கிறார்கள். ’குக்கூ குக்கூ’ பாடலை இவர் மழலை மொழியில் பாடுகிறார்.
இது அனைவரும் கவரும் விதமாக இருக்கிறது. மேலும் செடிக்கு ஆசையாக தண்ணீர் ஊற்றுகிறார். செடி எப்படி வளர்க்க வேண்டும் என்று அவர் விவரிக்கிறார். விதை போட வேண்டும். தண்ணீர் ஊற்ற வேண்டும் என்று இவர் வர்ணிக்கும் அழகில் அனைவரும் மயங்கிவிடுவர்.
மேலும் இந்த குழந்தையின் அப்பாதான் இந்த இன்ஸ்டிராகிராம் பக்கத்தை ஆரம்பித்து நடத்தி வருகிறார். அப்பா- அம்மா உறவு குறித்து இவர் பாடிய பாடல் 85 ஆயிரம் பேர் லைக் செய்திருக்கிறார்கள்.
இணையத்தில் இதுபோல நல்லிரவில் இதுபோல பலர் பிரபலம் அடைந்துவிடுவார்கள். ஆனால் இந்த குழந்தையின் வீடியோக்கள் பலருக்கு புத்துணர்வை அளிக்கும் விதமாக இருக்கிறது.