சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு சென்றிருந்த புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் அவமதிக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், அதற்கு தமிழிசை மறுப்பு தெரிவித்துள்ளார்.
சிதம்பரம் கோவிலில் இன்று காலை சுவாமி தரிசனத்திற்கு சென்றிருந்தாக கூறிய அவர், கோவில் வளாகத்திற்குள் தான் அமர்ந்த போது இங்கே அமரக்கூடாது என்றும் அருகில் உள்ள இடத்தில் ஒருவர் சொன்னதாகவும் கூறியவர் அதனை அவமானமாக நினைக்கவில்லை என்றார்.
மேலும் சிதம்பரம் கோயில் என்றாலே பிரச்சனை தீர்க்கப்பட வேண்டும் ஆனால் பிரச்சனைதான் வருகிறது. அவர்களுடைய பிரச்சனையை தீர்க்கப்பட வேண்டும்… மக்களோட பிரச்சனையை தீர்க்கப்பட வேண்டும்… அதற்கு சிவன் இருக்கிறார் என்று நினைக்கிறேன் என தெரிவித்தார்.