ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே வெள்ளிக்கிழமை காலை மேற்கு ஜப்பானில் உள்ள நாராவில் தெருமுனை கூட்டம் ஒன்றி பேசிக்கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத நபர் சுட்டதில் ரத்தவெள்ளத்தில் சரிந்தார்.
ஆளும் லிபரல் டெமாக்ரடிக் கட்சியின் முன்னாள் தலைவரான அபே ஞாயிற்றுக்கிழமை ஜப்பான் மேலவைக்கு நடைபெறும் தேர்தலுக்கு பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது இந்த சம்பவம் நடைபெற்றது.
அபே மீது இரண்டு முறை பின்னால் இருந்து சுட்டதாகவும் அவர் ரத்தவெள்ளத்தில் மயங்கி விழுந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவரது நிலை குறித்து வேறு எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை.
சம்பவம் தொடர்பாக தாக்குதல் நடத்திய நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.