சென்னை: சிங்காரச்சென்னை 2.0 திட்டத்தின் கீழ் மழைநீர் வடிகால் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார். ரூ.68.4 கோடி மதிப்பில் இதுவரை 179 கி.மீ. நீளத்திற்கு சென்னை மழைநீர் வடிகால் பணிகள் நிறைவடைந்துள்ளன. மழைநீர் வடிகால் பணிகளை தாமதப்படுத்தும் ஒப்பந்ததார்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது எனவும் அவர் பேசினார்.