பிரித்தானியாவில் இந்திய வம்சாவளி பெண் செய்த நூதன மோசடி: அம்பலமான அதிர்ச்சி பின்னணி


பிரித்தானியாவின் ல்லனெல்லி பகுதியை சேர்ந்த இந்திய வம்சாவளி பெண் ஒருவர் வாகன சாரதிகளுக்கான தேர்வில் நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்காக பங்கேற்றது அம்பலமாகியுள்ளது.

இந்த விவகாரம் விசாரணையில் கண்டறிந்த நிலையில், தற்போது அவருக்கு 8 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ல்லனெல்லி பகுதியை சேர்ந்த 29 வயது இந்திரஜீத் கவுர் என்பவரே ஆங்கில மொழியில் சிரமம் கொண்டவர்கள் பெயரில் வாகன சாரதி தேர்வில் பங்கேற்றுள்ளார்.

கடந்த 2018 முதல் 2020 வரையான காலகட்டத்தில் இவர் 150 தேர்வுகளில் பங்கேற்றுள்ளதாக விசாரணையில் ஒப்புக்கொண்டுள்ளார்.
நீதிமன்ற விசாரணையில், ஸ்வான்சீ, கார்மர்தன், பர்மிங்காம் மற்றும் லண்டனைச் சுற்றியுள்ள பகுதிகள் உட்பட இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் முழுவதும் கவுர் குற்றங்களைச் செய்துள்ளார் என தெரிய வந்துள்ளது.

வாகன சாரதிகளுக்கான தேர்வு ஒன்றில் கலந்துகொண்ட கவுர் மீது சந்தேகத்தின் அடிப்படையில் புகார் அளிக்கப்பட சவுத் வேல்ஸில் விசாரணை அதிகாரிகளால் விசாரணை தொடங்கப்பட்டது.

பிரித்தானியாவில் இந்திய வம்சாவளி பெண் செய்த நூதன மோசடி: அம்பலமான அதிர்ச்சி பின்னணி | Driving Tests For Candidates Indian Woman Jailed

இதில் ஆங்கில மொழியில் சிரமம் கொண்ட ஆசிய நாட்டவர்களுக்காக கவுர் குறித்த மோசடியை செய்து வந்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பில் விசாரணையை முன்னெடுத்த அதிகாரி ஸ்டீவன் மலோனி தெரிவிக்கையில்,

வாகன சாரதிகளுக்கான சோதனைச் செயல்முறைக்கு உதவுவதால், திறமையற்ற மற்றும் ஆபத்தான வாகன சாரதிகளுக்கு சட்டப்பூர்வமான உரிமங்களை அனுமதிப்பதன் மூலம், அப்பாவி சாலைப் பயணிகளை ஆபத்தில் தள்ளுவதற்கு ஒப்பான செயலை கவுர் மேற்கொண்டுள்ளார் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நமது சாலைகளில் பாதுகாப்பிற்கு எப்போதும் முன்னுரிமை அளிக்கப்படுகிறது, சட்டத்தை பின்பற்றாதவர்களை கைது செய்வது, தகுதியற்ற சாரதிகளை சாலையில் இருந்து வெளியேற்றுவதை உறுதி செய்கிறது என்றார். 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.