இந்திய வர்த்தகத்தில் சீன ஸ்மார்ட்போன் மற்றும் டெலிகாம் நிறுவனங்கள் செய்து வரும் மோசடிகள் 2022 ஆம் ஆண்டின் துவக்கத்தில் இருந்தே ஒவ்வொன்றாக வெளியாகி வருகிறது.
இந்த நிலையில் ஏப்ரல் மாதம் சியோமி-யில் துவங்கி நேற்று விவோ வரையில் பல நிறுவனங்கள் அமலாக்கத் துறை சோதனை செய்து பல முறைகேடான ஆவணங்களைக் கைப்பற்றியது.
இந்நிலையில் தற்போது உலகின் முன்னணி டெலிகாம் உபகரணம் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் விற்பனை நிறுவனமான ஹூவாய் தனது நிதி கணக்கில் பெரும் மோசடியைச் செய்துள்ளது தற்போது தெரிய வந்துள்ளது.
சாமானியர்களுக்கு நல்ல வாய்ப்பு தான்.. தங்கம் விலை நிலவரம் என்ன தெரியுமா?
ஹூவாய்
சீன ஹூவாய் நிறுவனத்தின் இந்திய கிளை நிறுவனம் பெரும் தொகையைச் சீனாவிற்கு அனுப்பியுள்ளது.இந்தியாவில் வரி செலுத்தக் கூடாது என்பதற்காகவே ஹூவாய் இந்தியா சீனாவில் இருக்கும் தனது தாய் நிறுவனத்திற்கு அதிகப்படியான பணத்தை அனுப்பியுள்ளதாக வருமான வரித் துறை குற்றம்சாட்டியுள்ளது.
750 கோடி ரூபாய்
ஹூவாய் இந்திய வர்த்தகக் கிளை கடந்த 2 வருடத்தில் சுமார் 750 கோடி ரூபாய் அளவிலான தொகையைத் தனது தாய் நிறுவனத்திற்குப் பல காரணங்களைக் காட்டி சீனாவுக்கு அனுப்பியுள்ளது.
முரண்பாடு
இதேவேளையில் ஹூவாய் இந்தியா நிறுவனத்தின் வர்த்தகம் அதிகளவில் சரிந்துள்ள வேளையிலும் இந்தப் பெரும் தொகை இந்தியாவில் இருந்து சீனாவுக்கு அனுப்பியது முரண்பாடாக உள்ளது என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
பிப்ரவரி மாத சோதனை
வருமான வரித்துறை பிப்ரவரி மாதம் ஹூவாய் நிறுவனத்தின் இந்திய அலுவலகத்தில் சோதனை மேற்கொண்டது. இந்தச் சோதனையில் பல்வேறு ஆவணங்களைக் கைப்பற்றியது மட்டும் அல்லாமல் ஹூவாய் இந்திய கணக்குகளை முடக்கியது.
டெல்லி உயர் நீதிமன்ற
இது தொடர்பாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில் ஹூவாய் இந்தியா சீனாவுக்கு அனுப்பிய 750 கோடி ரூபாயில் முறைகேடும், வரி ஏய்ப்பும் நடந்துள்ளதாக அறிவித்துள்ளது நீதிமன்றத்தில் வருமான வரித்துறை விளக்கம் கொடுத்துள்ளது.
விவோ நிறுவனம்
கிட்டதட்ட இதேபோலத் தான் விவோ நிறுவனம் தனது இந்திய வர்த்தகத்தில் அதன் மொத்த விற்றுமுதல் அதாவது Turnover-ல் கிட்டத்தட்ட 50 சதவீத பணத்தைச் சுமார் 62,476 கோடி ரூபாயை இந்தியாவில் வரி செலுத்துவதைத் தவிர்ப்பதற்காகவே திட்டமிட்டு சீனா-வுக்கு அனுப்பியுள்ளது என அமலாக்க துறையின் அதிரடியான சோதனையில் தெரிய வந்துள்ளது.
Huawei India sent 750 crore to China even revenue, business fell; After Vivo, Huawei into trouble
Huawei India sent 750 crore to China even revenue, business fell; After Vivo, Huawei into trouble வருமான வரித்துறை கிடுக்குப் பிடியில் சிக்கிய ஹூவாய்.. ரூ.750 கோடி எங்க..?!